கவிதைகள் OLBN ™


Channel's geo and language: India, Tamil
Category: not specified


கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா
🔰🔰

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, Tamil
Statistics
Posts filter


நினைக்கவே நேரம் சரியாயிருக்கிறது..

பிறகு,
நானெப்படி
மறப்பேன் உன்னை!

🤎🤍🩶

@KavithaigalOLBN


ஒவ்வொரு காலையும்
மகிழ்வுடன் ஆரம்பித்து..

அதே மகிழ்வுடன்
அன்றைய நாளை கடந்துவிட்டால்..

அதுவே ஒரு
சாதனை தான்!

🌄🌞

இனிய காலை!

@KavithaigalOLBN


நேர்கொண்டு பாராயோ
பெண்ணே
எனை எதிர் கொண்டே
உன் விழி அழகினில்
நான் மதிமயங்கிட..

ரதி இதழது அதிமதுர
தேன்பலா தானோ
கண்டதும் இனித்ததே
என் கன்னங்களும்
உன் பூ முத்தம் வேண்டியே..

தங்கசங்கிலி மின்னும் கழுத்தது
நீள் தாமரை மலர்
தண்டென இருக்க
தவறாது எழுதிடுவேன்
நித்தம் ஒரு கவிதை
என் இதழ் கொண்டே
கழுத்தினில் துவங்கி
இடையினில்
முற்று புள்ளிகள் வைத்தே..

பேரழகு பெட்டகமே
கட்டிலின் காம புதையலே
உனை கை கொள்ளும்
நாளெதுவென்று
எண்ணி எண்ணி ஏங்கியதால்
தூக்கமின்றியே
வீங்கியதடி
என் விழியிரண்டும்!

❤️❤️

🔞 @DocAntharangam


பிறரை 'ஏத்தி' விட்டுப் பார்க்காதீர்கள்..

அடுத்தவரை 'ஏற்றி' விட்டுப் பாருங்கள்..

வாழ்க்கை அழகாய் இருக்கும்!

💚💛🧡

இனிய காலை!

@KavithaigalOLBN


யாருமில்லாத
வெறுமை
ஏதுமில்லாத
மனம்..

முன்னிரவு
தனிமை
முகிலற்ற
வானம்..

முள்குத்திய
நெஞ்சம்
அடக்க வேண்டிய
அழுகை..

என் துணையாக
நீயிருக்கையில்
இரவும் அழகானதே!!

🌓🌒🌙

இனிய இரவு!

@KavithaigalOLBN


நிம்மதியை அதிகம்
எது கொடுக்கிறதோ..

அதுவே நிம்மதியை
அதிகம் கெடுக்கவும் செய்யும்!

😍😍😍

இனிய மாலை!

@KavithaigalOLBN


நிறைவேறாத
ஆசைகளை சேமித்து
வைப்பதைவிட..

இதுதான் நிஜமென்று
கடந்து செல்வோம்!

💚🩵💙

@KavithaigalOLBN


எல்லாம் சரியாக இருந்தால்
அது வசதியான குடும்பம்..

எல்லாரும் சரியா இருந்தா அதுவே மகிழ்ச்சியான குடும்பம்!



நற்காலை!

@KavithaigalOLBN


உன்
பிழைப்பில்
புதைந்திருக்கும்
புற்று நான்..!!

💕💕

இனிய இரவு!

@KavithaigalOLBN


மகரந்தம் தாங்கும்
மலர் போல
தனியொரு வாசம்
அவள் மேல்..

என்னவள்!

💃❤️❤️

இனிய மாலை!

@KavithaigalOLBN


மனிதர்களுக்கு
இடையிலான அடிப்படை
நம்பிக்கை..

அது
உடைபடுகையில்..

மனங்கள்
பிரிந்து தொலையும் !

💔💔💔

@KavithaigalOLBN


பிடித்தவர்கள்
சொல்லும் போது மட்டுமே
சில வார்த்தைகள்
பிடித்து போய்விடுகிறது!

❤️❤️❤️

இனிய காலை!

@KavithaigalOLBN


வா நீயும் நானும்
சேர்ந்து பேசிப்
பார்க்கலாம்..

ஒரு கப் தேநீர்
குடித்து முடிப்பதற்குள்..

நான் எல்லாவற்றையும்
சொல்லி முடிக்கின்றேன்
நீ கேட்டால் போதும்..

மிஞ்சிப் போனால் நான்
என்ன சொல்லி விடப்
போகிறேன்..

நான் உன்னை அதிகமாக
நேசிக்கிறேன் என்று..

நீ அதை கேட்டால்
போதும்!

❤💃🕺

@KavithaigalOLBN


எவர்
துன்பத்தையும்
தெரிந்து கொள்..

ஆனால்
உன் கருத்தை
கூறிவிடாதே!



நற்காலை!

@KavithaigalOLBN


உன்னை கொண்டாட
ஒருநாள் போதாது
என்றாலும் கூட..

உன்னை போற்றும் இத்தருணத்தை தவறவிட
விரும்பவில்லை!!

💙💞💜

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

@KavithaigalOLBN


பூ சூடும் பெண்ணே நீ புகழ் சூழ வாழ்க..

வானளவு உன் புகழ் பரவ
வாழ வேண்டும்!

🏆🏆🏆

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

@KavithaigalOLBN


அறிந்தால் கவிதை..

அஃதிலார்க்கு புதிர்க்காடு..

அவ்வளவே பெண்!

😍😍😍

மகளிர் தின வாழ்த்துக்கள்!

@KavithaigalOLBN


மென்மையான
பெண்மையே..

உறுதி கொண்ட
மனதினாய்..

உள்ளம் பூக்கும்
அன்பினாய்..

சேவை செய்யும்
மனிதமே..

உன்னையன்றி
உலகம்
இயங்குமா ?

சிறிய
விதைக்குள்
மாமரம் போல..

உனக்குள்
எத்தனை
உருமாற்றம்?

பெருமை
கொள்கிறேன்
உங்களை நினைத்து!

🌹🌹🌹

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

@KavithaigalOLBN


ஈன்றெடுத்து பாலூட்டி வளர்த்தவள் தாயாகின்..

கடைசி வரை நம் துணை நிற்பவள் மனைவி!

❤️❤️❤️

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்துக்கள்!!

@KavithaigalOLBN


எழு
சிறகை விரி
பற..

எல்லைகளைக் கட
பிரபஞ்சத்தை அள..

உன்னை உணர்
உன்னை காண்
உன்னை படி..

உன்னிலிருந்தே
புதிய "நீ"
உருவாகு..

உனக்கான
உலகை நீயே படை
அதற்கான வண்ணத்தை
நீயே தீட்டு !!!

🩵💙💚

அனைத்து தாேழிகளுக்கும்
இனிய மகளிர் தின
வாழ்த்துக்கள் !!!

@KavithaigalOLBN

20 last posts shown.