கார் மற்றும் பைக்குகளின் விமர்சனங்கள் !


Kanal geosi va tili: Hindiston, Tamilcha


புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கார்,பைக்குகளின் விமர்சனங்கள், ஆட்டோமொபைல் துறையில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி உடனுக்குடன் தமிழில் அறிய !✨✨.
For All News in Tamil 👉 @livenews_tamil
For any query 👉 @hokomartadmin
For BestTamilGroups List
👉 @TamilBest

Связанные каналы

Kanal geosi va tili
Hindiston, Tamilcha
Statistika
Postlar filtri














இருசக்கர வாகனங்களை பராமரிப்பது எப்படி?
@bikeandcar_news
இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் அவ்வப்போது அதனை பராமரித்தல் அவசியம் ஆகும். இவ்வாறு செய்வதால், வாகனம் அடிக்கடி பழுதாகாது. ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் அல்லது மொபட் போன்ற இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதை பராமரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது பெட்ரோல், ரிசர்வ் நிலையில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முன் பின் டயர்களில் சரியான அளவு காற்று இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். டயர்களில் உள்ள சிறு சிறு கற்களை அகற்ற வேண்டும்.

ஆயிலுக்கு தனியாக டேங்க் இருந்தால் அதையும் சரி பார்க்க வேண்டும். பிரேக், கிளட்ச் ஆக்சிலேட்டர் சரியாக செயல்படுகிறதா? என்பதை சரி பார்க்க வேண்டும். ஹாரன், லைட் ஆகியவை சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

For More detail
👇👇


அடுத்த மாதமும் கார் உற்பத்தியை குறைக்கும் டொயோட்டா
@/bikeandcar_news
டொயோட்டா மோட்டார் கார்ப் நிறுவனம் தனது சர்வதேச கார் உற்பத்தி பணிகளை 15 சதவீதம் குறைக்கிறது. முன்னதாக நவம்பர் மாதம் பத்து லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய டொயோட்டா திட்டமிட்டு இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையை 8.5 லட்சம் முதல் 9 லட்சம் யூனிட்களாக குறைக்கிறது.

கார் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஜப்பானில் 50 ஆயிரம் யூனிட்கள், வெளிநாட்டு சந்தைகளில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் யூனிட்கள் வரை குறையும்.

முன்னதாக செப்டம்பர் மாத வாக்கில் டொயோட்டா கார் உற்பத்தியை மூன்று சதவீதம் வரை குறைத்தது. சீனாவில் தொடர்ச்சியான மின்வெட்டு காரணமாகவும் கார் உற்பத்தி பணிகள் பாதிக்கப்படுவதாக டொயோட்டா அறிவித்து இருக்கிறது.




Quality Buttons Bot dan repost
🥳 இந்த வார சலுகை

💁 இப்பவும் சொல்றோம் எப்பவோம் சொல்லுவோம் ! நாங்கள் விற்பனை செய்கின்ற விலையை விட நீங்க கம்மியா வாங்கிட்டா உங்க FULL AMOUNT REFUND ( PROOF NEEDED WITH Same Quality ) 🤡

🤪 Flipkart , Amazon la check பண்ணி பார்த்துட்டு J𝙤𝙞𝙣 𝙋𝙖𝙣𝙣𝙪𝙣𝙜𝙖 !

💸 சும்மா ஒரு TIME PASS-க்கு J𝙤𝙞𝙣 𝙋𝙖𝙣𝙣𝙪𝙣𝙜𝙖 𝙉𝙖𝙣𝙗𝙖𝙧𝙜𝙖𝙡𝙖 , ஒரு வேளை நீங்கள் எதிர்பார்த்த விலை இருந்தால் ?

👇🏻💥🔥

⚠️JOIN KNOW⚠️
▭▬▭▬▭▬👇🏻▭▬▭▬▭▬
🙂 Will accept only 50 entries🙂
❤️ BEST Quality and BEST Price ❤️
👆👆👆Join Fast 👆👆👆
▭▬▭▬▭▬👆🏻▭▬▭▬▭


👍 பொருள் நீங்கள் எதிர்பார்த்த விலைக்கு வாங்க எங்கள் நிறுவனம் ( Hokomart Thamizhan ) சார்பாக வாழ்த்துக்கள் 🥳

For More Details : @hokomartadmin

💥 வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏


முழு சார்ஜ் செய்தால் 121 கி.மீ. செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
@bikeandcar_news
ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் மேக்னஸ் இ.எஸ். என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 68,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
புதிய ஆம்பியர் மேக்னஸ் இ.எக்ஸ். மாடல் முழு சார்ஜ் செய்தால் 121 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 1200 வாட்ஸ் மோட்டார் இந்த பிரிவு வாகனங்களில் இதுவரை வழங்கப்படாத ஒன்று ஆகும்.

இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 10 நொடிகளில் எட்டிவிடும். இதில் இகோ மற்றும் பவர் என இரண்டு ரைடிங் மோட்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.


பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஐகானிக் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் 3 சீரிஸ் ஐகானிக் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் பெட்ரோல் மாடல் விலை ரூ. 53.50 லட்சம் என்றும் டீசல் மாடல் விலை ரூ. 54.90 லட்சம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
@bikeandcar_news
புதிய லிமிடெட் எடிஷன் மாடல் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு கிடைக்கும். 3 சீரிஸ் கிரான் லிமோசின் ஐகானிக் எடிஷன் மினரல் வைட், கார்பன் பிளாக் மற்றும் கஷ்மிரி சில்வர் போன்ற பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது.

பி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் மாடலின் கிரில் பகுதியில் எல்.இ.டி. லைட்கள் உள்ளன. இவை முன்புற தோற்றத்தை மேலும் அழகாக்குகிறது. இந்த காரில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.


இந்தியாவில் ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் ஸ்டெல்த் எடிஷன் அறிமுகம்
@bikeandcar_news
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் ஸ்டெல்த் எடிஷன் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எக்ஸ்டிரீம் 160ஆர் ஸ்டெல்த் எடிஷன் விலை ரூ. 1,16,660 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
ஸ்டெல்த் எடிஷன் மாடல் ஸ்டான்டர்டு மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த மாடலில் மேட் பிளாக் நிற பெயிண்டிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 3டி சின்னம் மற்றும் ஸ்டெல்த் பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது

புதிய நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் 160சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. திறன், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.


மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. பிராஜக்ட் ஒன் உற்பத்தி விவரம்

மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. பிராஜக்ட் ஒன் 2017 ஆண்டு நடைபெற்ற ஐ.ஏ.ஏ. மொபிலிட்டி நிகழ்வில் கான்செப்ட் கார் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
@bikeandcar_news
எப்1 சார்ந்த ஹைப்ரிட் பவர்டிரெயின் போன்று உருவாக்க பல்வேறு சவால்களை எதிர்கொண்டதால், மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஹைப்பர்கார் உற்பத்தி பணிகள் தாமதமாகி இருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் பிராஜக்ட் ஒன் பார்முலா 1 மாடல்களில் உள்ளதை போன்ற பிளக்-இன் ஹைப்ரிட் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது.
For More detail
👇👇


மூன்று டிரைவிங் மோட்களை கொண்ட அபாச்சி 160 4வி இந்தியாவில் அறிமுகம்
@bikeandcar_news
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடலில் புதிய ஹெட்லேம்ப் செட்டப், எல்.இ.டி. டி.ஆர்.எல்., மூன்று ரைட் மோட்கள் உள்ளன.
இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச், பிரேக் லீவர்கள், பிரத்யேக பிளாக் நிறம், சிவப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் புதிய சீட் கொண்டிருக்கிறது. புதிய ஆர்டிஆர் 160 4வி மாடலில் டிவிஎஸ் SmartXonnect ப்ளூடூத் கனெக்டிவிட்டி சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் புதிய டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடல் விலை ரூ. 1,15,265 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,21,372 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மாடல் ரேசிங் ரெட், மெட்டாலிக் புளூ மற்றும் நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.


விரைவில் இந்தியா வரும் ஸ்கோடா ஸ்லேவியா
bikeandcar_news
ஸ்கோடா நிறுவனம் விரைவில் ஸ்லேவியா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. தற்போது இந்த காருக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசரில் புதிய ஸ்லேவியா செடான் மாடல் என தெரியவந்துள்ளது. புதிய ஸ்லேவியா மாடல் எம்.கியூ.பி. ஏ.ஒ. ஐ.என். பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.
இந்த காரின் பவர் டிரெயின் ஸ்கோடா குஷக் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் ஸ்கோடா ஸ்லேவியா மாடலில் 113 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் அல்லது 150 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்

இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், 1.5 லிட்டர் என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.


அங்கு உற்பத்தி செய்தால், இங்கு விற்பனை செய்யக்கூடாது - மத்திய மந்திரி அதிரடி
@bikeandcar_news
டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார். மேலும் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது என்றும் டெஸ்லா நிறுவனத்திடம் தெரிவித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

'சீனாவில் உற்பத்தி செய்த எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது. எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து, இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்,' என அவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு டெஸ்லா எழுதியிருக்கும் கடிதத்தில் 'இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட வேண்டும். தற்போது சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படும் கார்களுக்கு 60 முதல் 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது,' என தெரிவித்துள்ளது.


விரைவில் இந்தியா வரும் பி.எம்.டபிள்யூ. ஸ்கூட்டர்
@bikeandcar_news
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் தனது புதிய சி400 ஜிடி ஸ்கூட்டர் இந்தியாவில் அக்டோபர் 12 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இதற்கான டீசரை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறது.
அறிமுகமானதும் இந்திய சந்தையின் விலை உயர்ந்த ஸ்கூட்டர் என்ற பெருமையை பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி பெறும். தற்போதைய தகவல்களின்படி பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடல் வரிகள் சேர்க்கப்படாமல் இந்தியாவில் ரூ. 5 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். பி.எம்.டபிள்யூ. சி400 ஜிடி மாடலில் 350 சிசி, சிங்கில் சிலிண்டர், வாட்டர் கூல்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. திறன், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். புதிய பி.எம்.டபிள்யூ. ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.


Quality Buttons Bot dan repost
🎂🎂On 10.10.2020 we started Hokomart sales. Today we completed the first year. Without your support, this is not possible. Thanks to all our customers and supporters.🎂🎂

🔥From Oct 10 to 12, we sell selected products at offer price.

🥳Hurry!! We have limited stock.

👉For More Details : @hokomartadmin


இந்தியாவில் லெஜண்டர் 4x4 அறிமுகம் செய்த டொயோட்டா
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் லெஜண்டர் 4x4 மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 42.33 லட்சம் ஆகும். ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட லெஜண்டர் 4x2 மாடல் விலை ரூ. 37.58 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
@bikeandcar_news
இந்தியாவில் டொயோட்டா லெஜண்டர் 4x2 மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் புதிய பார்ச்சூனர் மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் 2700 லெஜண்டர் யூனிட்களை டொயோட்டா விற்பனை செய்து உள்ளது.

புதிய லெஜண்டர் மாடலில் 2.8 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 201 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ளது.

20 ta oxirgi post ko‘rsatilgan.

457

obunachilar
Kanal statistikasi