கூடுதல் புகார் - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மோசடி
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பேராசிரியர் மோசடியில், அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு இன்று வரை முழுமையான விசாரணை மேற்கொள்ளவில்லை, அதற்கான புதிய ஆதாரம் குறித்தும், தற்போது நடைபெறும் இணைவு அங்கீகார ஆய்வு குறித்தும், அறப்போர் இயக்கம், துறை சார்ந்தவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தற்பொழுது, 2024-25 கல்வியாண்டுக்காண கல்லூரிகள் மறு ஆய்வு (Re-Inspection) மற்றும் 2025-26 ஆம் ஆண்டுக்கான இணைவு அங்கீகார ஆய்வு (Inspection) செயல்பாடுகள் துவங்கியிருகிறது. சுமார் 2 இலட்சம் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கும் நிலையில், தற்பொழுது நடைபெற இருக்கும் ஆய்வு மிக முக்கியமானது, அதிலும் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமானால், பல முறைகேடுகள், மோசடிகள் தடுக்கப்படும்.
ஆகவே, மறு ஆய்வு (Re-Inspection) மற்றும் இணைவு ஆய்வு (Inspection) ஆகியவை மேற்கொள்ளும் போது, பேராசிரியர்களின் ஊதிய அறிக்கை (Salary Statement), வருங்கால வைப்பு நிதி (PF), காப்பீடு (ESI) முழுவதும் பரிசோதிக்கவேண்டும், மேலும் தேதியுடன் கூடிய(Date Stamp) வீடியோவாக பதிவு செய்ய வேண்டும். அப்படி வீடியோவாக பதிவு செய்வது என்பது ஆய்வுக்கு பிறகான காலகட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அதை நிறுவுவதற்காக பயன்படும்.
எனவே அறப்போர் இயக்கம், சில கோரிக்கைகளை அரசுக்கு முன்வைக்கிறது,
1. 23.07.2024 அன்றைய புகாரில் குறிப்பிட்டது போல இணைவு அங்கீகார ஆய்வு சென்றோர், மோசடியில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகம் ஆகியோர் மீது சட்டநடவடிக்கை மற்றும் அங்கீகார இரத்து நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
2. அரசு விரிவுரையாளர் மற்றும் அரசு கௌரவ விரிவுரையாளராக வேறு யாரேனும், Dr.J.இராமகிருஷ்ணன் போன்று மோசடியில் ஈடுப்படுள்ளனரா என்று விரைவாக விசாரிக்கப்பட வேண்டும்.
3. தற்பொழுது, மேற்கொள்ள இருக்கும் ஆய்வுகளின் (மறு ஆய்வு மற்றும் இணைவு அங்கீகார ஆய்வு) போது பேராசிரியர்களின் ஊதிய அறிக்கை (Salary Statement), வருங்கால வைப்பு நிதி (PF), காப்பீடு (ESI) முழுவதும் பரிசோதிக்கவேண்டும் மேலும் தேதியுடன் கூடிய(Date Stamp) வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.
4. மாணவர்களுக்கான கட்டணம் மற்றும் அவர்களுக்கான கல்வி உரிமை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அரசுக்கு தெரியப்படுத்தப்படும் வழிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
https://youtu.be/Y-onkTGGryQ?feature=shared