தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦


Channel's geo and language: India, Tamil
Category: not specified


Similar channels

Channel's geo and language
India, Tamil
Category
not specified
Statistics
Posts filter






இறுகிய மனதை இலகுவாக்கினால் போதும்..

இல்லை என்ற வார்த்தை மறைய!



எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும்..

கையளவு மனதிடம் தான் தீர்வுண்டு!

💛🧡💛


காற்றினால்
ஆடை நெய்தல்
நிகழவிடு!

💙💙💙


நாம் செல்ல வேண்டிய
பாதையைத் தொலைத்துவிட்டு
தடுமாறும் போதெல்லாம்..

ஒரு புதிய பாதையைக் கண்டுபிடிக்கிறது கால்கள்..

நம்பிக்கையோடு பயணிப்போம்!

💐💐💐

காலை வணக்கம்!


நீ ஏன் எனக்காய்
வராமல் போனாய்?

வாழ்வில் வராமலே இருந்திருக்கலாமே!

💔💔


அழைக்கவும் முடியாமல்
அழிக்கவும் இயலாமல்
ஆயிரமாயிரம் எண்கள்
சேமிப்பில்..

அத்தனை எளிதாக
இல்லை
எண்களை அழித்து
விடுவது!

💔💔


நீ
எப்போதும்
உடனிருக்க
வேண்டுமென்றில்லை..

தன்னம்பிக்கை
இழந்து, உடையும் தருணத்தில்
உடனிரு போதும்!

💛🧡💛


இளமையின்
நிகழ்வுகள் யாவும்..

நினைவுகளாய்
முதுமையில்!

💔💔


என் எல்லா செயல்களிலும் உன் நினைவு..

என் தேநீரில் இன்னும் அதிகமாய் நீ..!!

❤️❤️❤️


உலக மொழிகளில்..

மொழி பெயர்க்க முடியாத அழகியல்..

மழலை இவர்களின் புன்னகை..!!

அழகு ❤


அன்பில் சுயநலம் என்ன தெரியுமா?

மொத்த அன்பையும்; மொத்த கோபத்தையும்..

தனக்கானவர்கள்
தன்னிடம் மட்டுமே வெளிப்படுத்த
வேண்டும் என்பது தான்!

💟💟💟


அவள் கைரேகைக்குள்

தான் அடங்கியது

என் ஆயுள் ரேகை.


வாக்குறுதி ஒரு வலிமையான வார்த்தை..

அவை
ஆழமாக எதையோ உருவாக்குகிறது..

அல்லது
எல்லாவற்றையும் உடைக்கிறது!

💙💜


இடைவெளியற்ற
தொடர் பயணத்தின்..

சிறு சிறு
மனம் ரசிக்கும்
இடைவேளைகளில்..

விரிகிறது
ஒரு வானம்
மகிழ்ச்சி !

💙💕💜


புரிதல் இல்லா உறவுகளில்..

வலிகள் மட்டுமே
வானளவுக்கு இருக்கும்!

💗💗💗

காலை வணக்கம்!


துரத்துவது தோல்வியாக இருந்தாலும்..

துவண்டு போகாமல் ஓட்டத்தை தொடருங்கள்..

வெற்றியை இலக்காக கொண்டு!

💐💐💐

இனியநாள்!


நாட்குறிப்பில் நீயில்லா
நாட்கள் என்பது..

சுவாசித்தலில்
சேர்த்தியல்லவே!

❣😌🌱


பக்குவமென்பதெல்லாம் அனிச்சை செயல்!

💚💛

20 last posts shown.

3 990

subscribers
Channel statistics