❀•❀┈┉┅━❀•• [073] ••❀━┅┉┈❀•❀
மானம் இடி இடிக்க - Maanam Idi Idikka
┈┉┅━❀••🌺
@tamillyric 🌺••❀━┅┉┈
திரைப்படம் : உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
பாடகா்கள் : எஸ்.பி பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
இசை : இளையராஜா
வரிகள் : பிறைசூடன்
வருடம் : 1992
┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈
குழு : .............. ..... ............
ஆண் : மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
நெனச்சது பலிச்சதம்மா, எனக்கது கெடச்சதம்மா
என்னம்மா, சொல்லம்மா, கண்ணம்மா, கையத்தொட்டு
பெண் : மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
குழு : ........... ....... .............
பெண் : சின்னச்சின்ன ஆச, என்னத் தொட்டுப் பேச, கன்னி மனம் கூச
அங்கு காதல் வாசம் வீச, இது காமன் போட்ட பூஜ
ஆண் : மொட்டு மல்லி மால, கட்டி வச்ச வேள, பட்டுக்கூறச் சேல
தொட்டுக் கட்டிப் பாக்கும் சோல, மேளம் கொட்டிப் பாடும் வேள
பெண் : ஆளான அழகான கொடிதானையா
அதில் பூத்த புதுப் பூவில் தேன்தானையா
ஆண் : தேன் அள்ளி நான் உண்ண திரை ஏதம்மா
திரளான சுகம் காட்டும் கரை நானம்மா
பெண் : வெட்கமா சொர்க்கமா விட்டு விட்டு செல்லுமா
பக்கமா வந்துதான் மொத்தம்மா பலன் தரும்
மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
நெனச்சது பலிச்சதையா, எனக்கது கெடச்சதையா
என்னையா சொல்லையா, கண்ணம்மா கையத்தொட்டு
ஆண் : மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
குழு : ........... ........ ............
ஆண் : பொன்னுமணி பூட்டி, பூவிலங்கு சூட்டி, கன்னி வரும் நேரம்
அப்போ தன்னால் தீரும் பாரம் அதன் பின்னால் போத ஏறும்
பெண் : கட்டிலுக்கு மேலே, ரெட்டக் கிளி போலே, ஒட்டி நின்னு பாடும்
இளம்வட்டம் மோகம் தேடும், அதில் சொர்க்கம் நேரில் கூடும்
ஆண் : வாழ்நாளில் நினைக்காத புது நாளிது
காணாத கலையாத கலைதான் இது
பெண் : தேனோடு தினையாக இணையானது
மானோடு மானாக துணையானது
ஆண் : எண்ணந்தான் துள்ளுது, என்னமோ சொல்லுது
கண்ணம்மா, வண்ணமா, இன்பமா, பொங்கி வரும்
ஆண் : மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
பெண் : இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
ஆண் : நெனச்சது பலிச்சதம்மா, எனக்கது கெடச்சதம்மா
பெண் : என்னையா, சொல்லையா, கண்ணம்மா கையத்தொட்டு
பெண் : மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட
ராசாதி ராசா தொடுத்த மாலதான்
இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான்
┈┉┅━❀••🌿🌺🌿••❀━┅┉┈