بسم الله الرحمن الرحيم
▪️ காஃபிர்களுக்கு முரணாக நடந்து கொள்வதில் ஒரு முஸ்லிமுக்கு உள்ள கடமைகளும் அதற்கான ஆதாரங்களும்▪️
🎙️ விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ் ~•~•~•~•~•~
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு வழிப்பட்டு நடக்காத காஃபிர் என்ற இறை நிராகரிப்பாளர்களை அல்லாஹ் சபித்த காரணத்தால் முஸ்லிம் என்பவன் காஃபிர் - இறைநிராகரிப்பாளர்களுக்கு ஒப்பாக நடந்து கொள்ளக் கூடாது.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
யார் ஒரு சமூகத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கிறாரோ அவர் அந்த சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.
நூல்: அபூதாவூது 3512
நபி ﷺ அவர்களின் செயல்பாடுகளை குறித்து யூதர்கள் கூறிய வார்த்தை:
مَا يُرِيدُ هَذَا الرَّجُلُ أَنْ يَدَعَ مِنْ أَمْرِنَا شَيْئًا إِلاَّ خَالَفَنَا فِيهِ
நம்முடைய காரியங்களில் எந்தவொன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது (நபி ﷺ அவர்களின்) விருப்பமாக இருக்கிறது
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 507
இவ்வாறாக நம்பிக்கை கோட்பாடு தொடங்கி, தொழுகை, நோன்பு, ஹஜ் என்ற வணக்க வழிபாடுகள் மட்டுமில்லாமல் தோற்றத்திலும் செயல்களிலும் காஃபிர்களுக்கு மாறு செய்யுமாறு அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலானோர் நபிவழிக்கு முரணாக நடப்பதையும் காஃபிர்களுக்கு ஒப்பாக நடப்பதையுமே பெருமையாக கருதுகின்றனர்.
ஜாஹிலியத் சமூகங்களுக்கு முரணாக நடந்து கொள்வது ஒரு முக்கியமான அம்சமாகும். அவர்களுடைய இபாதாக்கள், அவர்களுடைய கலாச்சாரங்கள், அவர்களுடைய பழக்கவழக்கங்கள், அவர்களுடைய பெருநாள் தினங்கள், அவர்களின் ஆடை அணிகள் போன்ற இன்னும் பல விடயங்களில் முஸ்லிம் சமூகம் இன்று அவர்களுடன் இரண்டரக் கலந்து அவர்களைப் பின்பற்றுவதிலும் ஒத்துழைப்பு வழங்குவதிலும் மூழ்கிப் போயுள்ளார்கள். இத்தகைய வழிகேட்டிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.
காபிர்களுக்கு முரணாக நடந்துகொள்வதையே அல்லாஹ் விரும்புகின்றான். நபி ﷺ அவர்கள் யூத, கிறிஸ்துவ, நெருப்பு வணங்கிகளுக்கு வேண்டுமென்றே முரணாக நடந்துகொண்டார்கள். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
خَالِفُوا الْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்.
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 434
خَالِفُوا الْمَجُوسَ
நெருப்பு வணங்கிகளுக்கு மாறு செய்யுங்கள்
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 435
خَالِفُوا أَهْلَ الْكِتَابِ
வேதம் கொடுக்கப்பட்ட யூத கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுங்கள்
நூல்: முஸ்னது அஹ்மது 22283
எனவே இந்த ஈமானிய அம்சத்தை தெளிவாக அறிந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் பெண்ணின் மீதும் கடமையாகும். நம்மையும், நமது குடும்பத்தாரையும், ஏனைய மக்களையும் இறை நிராகரிப்பில் இருந்து பாதுகாப்போம்!! அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு தகுதி வாய்ந்தவன் என்பதை உரக்கக் கூறுவோம்!!!
🎧 உரையை செவிமடுக்க..
t.me/al_ilmush_sharee/2117| AL ILMUSH SHAREE