அறப்போர் இயக்கத்தின் 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்னும் பிரச்சாரத்தை உங்கள் பகுதியில் நீங்கள் மேற்கொள்ள விருப்பமா ?? பிரச்சாரத்தில் பங்குபெற இன்றே பதிவு செய்யுங்கள்.
https://arappor.org/MyVoteIsNotForSale-VolRegதேர்தல் என்றாலே, வேட்பாளர்கள் யார்? எந்த கட்சிகள் போட்டி போடுகிறது? யார் அவர்கள் என்ற கேள்விகளை தாண்டி, தற்போழுது 'யார் வருவார்கள், எவ்வளவு கொடுப்பார்கள்' என்பதே நாம் பேசும் செய்தியாகி விட்டது.
இப்படி, ஓட்டுக்கு பணம் என்பது சகஜமாகி விட்ட இன்றைய சூழல் என்ன கிடைத்தது நமக்கு?
1. அன்றாடம் எதிர் கொள்ளும் நமது அத்தியவாசிய பிரச்சனைகளை பற்றி கேள்வி கேட்க முடிகிறதா ?
2. தரமான சாலை, குடிநீர் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை கேட்க முடிகிறதா?
3. தரமான மருத்துவம், தரமான கல்வி என எது குறித்தாவது கேட்க முடிகிறதா?
நமது ஓட்டை நாம் விற்பதாலே கேள்வி கேட்கும் தார்மீக உரிமையையும் இழந்து விடுகிறோம். சில நூறுகளை கொடுத்து விட்டு பல கோடிகளை கொள்ளையடிப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.
அப்படியே கேட்டாலும், 'சும்மாவா ஓட்டு போட்ட' நம் விரலை கொண்டே நம் கேள்விகளை தட்டிவிடுகிறார்கள். மேலும் அவர்களின் திருட்டு பணத்தில் நாமும் அல்லவா பங்கு கொள்கிறோம்.
என்ன தான் தீர்வு?
நாம் ஒவ்வொருவரும் மாறினால் தான் இந்த அவல நிலையை மாற்ற முடியும். நேர்மையான சமூகத்தை விரும்பும் நாம் நேர்மையாக நடப்பது மிக அவசியம். பணம் வாங்கி கொண்டு உங்கள் தரத்தை தாழ்த்தி சுயமரியாதையை இழக்க போகிறீர்களா?? அல்லது ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்வழியில் நடந்து சுயமரியாதையுடன் இருக்க போகிறீர்களா??
முடிவு உங்கள் கையில்!
மக்கள் எவ்வழியோ, நம்மை ஆட்சி செய்பவர்களும் அவ்வழியே, மாற்றம் நம்மில் இருந்து துவங்கட்டுமே!
நம் ஓட்டு நம் உரிமை!
என் ஓட்டு விற்பனைக்கு அல்ல!
நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன்!
Register now to join the campaign!
https://arappor.org/MyVoteIsNotForSale-VolReg