கவிதைகள் OLBN ™


Гео и язык канала: Индия, Тамильский
Категория: не указана


கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா
🔰🔰

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Тамильский
Категория
не указана
Статистика
Фильтр публикаций


மென்மையான
பெண்மையே..

உறுதி கொண்ட
மனதினாய்..

உள்ளம் பூக்கும்
அன்பினாய்..

சேவை செய்யும்
மனிதமே..

உன்னையன்றி
உலகம்
இயங்குமா ?

சிறிய
விதைக்குள்
மாமரம் போல..

உனக்குள்
எத்தனை
உருமாற்றம்?

பெருமை
கொள்கிறேன்
உங்களை நினைத்து!

🌹🌹🌹

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

@KavithaigalOLBN


ஈன்றெடுத்து பாலூட்டி வளர்த்தவள் தாயாகின்..

கடைசி வரை நம் துணை நிற்பவள் மனைவி!

❤️❤️❤️

அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்துக்கள்!!

@KavithaigalOLBN


எழு
சிறகை விரி
பற..

எல்லைகளைக் கட
பிரபஞ்சத்தை அள..

உன்னை உணர்
உன்னை காண்
உன்னை படி..

உன்னிலிருந்தே
புதிய "நீ"
உருவாகு..

உனக்கான
உலகை நீயே படை
அதற்கான வண்ணத்தை
நீயே தீட்டு !!!

🩵💙💚

அனைத்து தாேழிகளுக்கும்
இனிய மகளிர் தின
வாழ்த்துக்கள் !!!

@KavithaigalOLBN


களைப்பு இருந்தாலும்..
நினைப்பு முழுவதும்..
பிள்ளைகளை பற்றியதே!

கிராமத்து தேவதைகளுக்கு..

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

💜💙💜

@KavithaigalOLBN


தாய்மையின்‌ சிறப்பினை
தன்னலமற்ற பொருப்பினை..

மண்ணுலகில் விதைத்திட
விண்ணளவில் விரித்திட..

பெண்ணாக
மண்ணில் அவதரித்த
பேரருள் மிக்க
பெண்கள் அனைவருக்கும்..

மகளிர்‌ நாள் வாழ்த்துகள்!

🧡💛💚

பெண்‌ இன்றி
அமையாது உலகு!!

@KavithaigalOLBN


ஒவ்வொரு மகிழ்ச்சியிலும்
ஒரு துயரம் மறைந்திருக்கும்..

ஒவ்வொரு துயரத்திலும்
ஒரு மகிழ்ச்சி மறைந்திருக்கும்..

எதிர்காலம் என்ன கொண்டுவரும் என யாருக்கு தெரியும்?

🌸🌼🌺

இனிய நாள்!

@KavithaigalOLBN


உழைப்புக்கு
ஒரு நாள் போதும்..

உல்லாசத்துக்கு
ஒரு மணி நேரம் போதும்..

ஆனால், நட்புக்கோ
ஒரு ஆயுள் போதாது!



இனிய காலை!

@KavithaigalOLBN


வாழ்க்கையின் ஆகச்சிறந்த பொக்கிஷம் என்பது..

சரியான நேரத்தில் கிடைக்கும் ஆறுதலும், மாறுதலும் தான்!!



@KavithaigalOLBN


எண்ணம்
தெளிவானதாக
இருந்தாலே..

யாவுமே தெளிவு
பெறும் உன்
வாழ்வில்!

🌸☕🫖

இனிய காலை!

@KavithaigalOLBN


நீ அழும் போது
உனக்கு ஆறுதல் சொல்பவர்,
நீ நேசித்தவராக
இருக்க வாய்ப்புகள் குறைவு..

அவர் கண்டிப்பாக உன்னை நேசித்தவராகத் தான் இருப்பார்!

❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

@KavithaigalOLBN


நதியோரம் நாணல்
ஒன்று
நாணத்தோடு நடந்திட..

அதை கண்ட
என் கால்கள்
அவள் பின்னே தொடர்ந்திட..

சுருள் கூந்தல் சரிவிலே
தொலைந்ததென்
விழிகளே..

சதிராடும் அழகிலே
சரிந்ததென் இதயமே..

இவளென்ன காதலின் மொழியா;
அழகுக்கே இலக்கணம்
இவளா..

எதை கொண்டு செய்தான் பிரம்மன்;
எனை கொண்டே சென்றாள் பெண்மான்..

மொழி பேசும் நிலவிவள் தானோ;
விழி பேச வீழ்ந்திட்டேன் நானோ..

இடி வீழ்ந்த நெடுமரம் போலே;
சட்டென்று சரிந்ததே
நெஞ்சம்..

முன் சென்றே
எந்தன் மனதை
முன்மொழிய
துணிவதுமின்றி..

பின்னாலே போனேன் போனேன் நான்
தொலைந்தே போக!

🧡💛💚

இனிய காலை!

@KavithaigalOLBN


அள்ளி அணைக்க
வேண்டாம்;
முத்தமழை பொழிய வேண்டாம்..

மடி தரவும் வேண்டாம்;
தோள் சாயவும்
வேண்டாம்..

கைகொண்டு
இறுக பற்றவும்
வேண்டாம்;
கண் இமைக்காது
எனை நோக்கவும்
வேண்டாம்..

காதலில் கரையவும்
வேண்டாம்;
காமத்தில் கலக்கவும்
வேண்டாம்..

அருகே இரு போதும்
என்றும்..

எனை விரும்பும்
ஓர் உயிராய்!!

❤️❤️❤️

இனிய இரவு!

@KavithaigalOLBN


அந்த காலம்..

ஊசி போடாத Doctor..

சில்லறை கேட்காத Conductor..

சிரிக்கும் Police..

முறைக்கும் காதலி..

உப்பு தொட்ட மாங்கா..

மொட்டமாடி தூக்கம்..

திருப்தியான ஏப்பம்..

Notebookன் கடைசிப்பக்கம்..

தூங்க தோள் கொடுத்த சக பயணி..

பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்..

இப்பவும் டேய் என அழைக்கும் தோழி..

இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா..

கோபம் மறந்த அப்பா..

சட்டையை ஆட்டய போடும் தம்பி..

அக்கறை காட்டும் அண்ணன்..

அதட்டும் அக்கா..

மாட்டி விடாத தங்கை..

சமையல் பழகும் மனைவி..

சேலைக்கு fleets எடுத்துவிடும் கணவன்..

வழிவிடும் ஆட்டோகாரர்..

High beam போடாத லாரி ஓட்டுனர்..

அரை மூடி தேங்கா..

12 மணி குல்பி..

Sunday சாலை..

மரத்தடி அரட்டை..

தூங்க விடாத குறட்டை..

புது நோட் வாசம்..

மார்கழி மாசம்..

ஜன்னல் இருக்கை..

கோவில் தெப்பகுளம்..

Exhibition அப்பளம்..

முறைப்பெண்ணின் சீராட்டு..

எதிரியின் பாராட்டு..

தோசைக்கல் சத்தம்..

எதிர்பாராத முத்தம்..

பிஞ்சு பாதம்..

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்..

வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது..

சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்..

முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்..

மிதி வண்டி வைத்திருந்தோம்..

எம்ஜிஆர், கலைஞர் உயிரோடு இருந்தார்கள்..

ரஜினி, கமல் படம் ரிலிஸ்..

கபில் தேவின் கிரிக்கெட்..

குமுதம், விகடன் நேர்மையாக இருந்தது..

வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்..

எல்லோரும் அரசு பள்ளிகளில் படித்தோம்..

சாலையில் எப்போதாவது வண்டி வரும்..

தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்..

மயில் இறகுகள் குட்டி போட்டன புத்தகத்தில்..

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே ஆங்கிலம்..

பத்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்..

பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள்..

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்..

கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா அழகி..

பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து நம்மை மறக்காத ஆசிரியர்..

கூட்டமான பஸ்ல, நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை..

7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி..

பாட்டியிடம் பம்மும் தாத்தா..

எல்லா வீடுகளிலும், ரேடியோவிலும், கேசட்டிலும் பாடல் கேட்பது சுகமானது..

வீடுகளின் முன் பெண்கள் காலையில் கோலமிட்டார்கள், மாலைப்பொழுதுகளில் வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள்..

சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம்..

ஆடி 18 தீபாவளி பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம்..

பருவ பெண்கள் பாவாடை தாவணி உடுத்தினர்..

சுவாசிக்க காற்று இருந்தது..

குடிதண்ணீரை யாரும் விலைக்கு
வாங்க வில்லை..

தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி
ஆடுவார்கள், அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் நுங்கு வண்டி ஓட்டுவோம்..

இதை எழுதும் நான்..

படிக்கும் நீங்கள்..

இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க..

கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.. நம் சுகங்களும்தான்..

அனுபவித்தவர்கள் யார்? யார்?

மனசுக்குள் ஒரு நமட்டு சிரிப்பு வருமே!!

உண்மையா? இல்லையா?



@KavithaigalOLBN

4.4k 0 25 20 103

உன்னை நினைத்துக் குடிக்கும்..

தேனீருக்கு சர்க்கரை
தேவை இல்லை அன்பே..!!

☕💕

காலை வணக்கம்!

@KavithaigalOLBN


இது தான் காதல் என்று எடுத்துக்கூற வார்த்தைகள் ஏதுமில்லை..

இவ்வளவுதான் என் காதல் என்று காட்ட அளவுகள் ஏதுமில்லை..

இப்படித் தான் உன்னை காதலிக்கிறேன் என்றெல்லாம் வரைமுறைகள் ஏதுமில்லை..

காதலித்தேன்..
காதலிக்கிறேன்..
காதலிப்பேன்!!

❤️❤️❤️

@KavithaigalOLBN


டாக்டர் அந்தரங்கம் - DOCTOR ANTHARANGAM

🔞 https://t.me/DocAntharangam

பாலியல் மருத்துவம்
♀ ஆலோசனைகள்
♂ குடும்பநல தகவல்கள்
♀ செக்ஸ் மருத்துவ தகவல்கள்
♂ தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள்

பாலியல் கல்வி

டாக்டர் அந்தரங்கம்:
🔞 https://t.me/DocAntharangam

Top Links: @TGLinksOLBN


உனக்கு கொடுக்காத
முத்தங்கள் இன்னும் ஆயிரம்
என்னிடம் இருக்கு..

அதை எப்போது
என்னிடம் பெற்று கொள்வாய்..

உன் உடல் மூடும்
ஆடையாக எப்போது என்னை
அணிந்து கொள்வாய்..

எனக்கெனவே பிரமன்
படைத்த சொர்கம் நீ யென்று
நான் உணர்வேன்..

உனக்கெனவே
இதயம் துடிக்கும் காதல்
நான் என்று எப்போது
நீ உணர்வாய்..

எந்த கவிதைகளுக்குள்
அடக்கி விட முடியாத
அழகு கவிதை நீ..

எனக்குள்ளே அடங்கி விடு
எனக்குள் எரியும் தீயை
கொஞ்சம்
அனைத்து விடு!!

💜💙

@KavithaigalOLBN


மெய் மறந்துதான்
போகின்றோம்
நானுமென்
இரவுகளும்..

விடியல் வரை
என்னிதழ்களில்
விடை தேடிய
என்னவள் காதலால்!

❤️❤️❤️

@KavithaigalOLBN


நான் தூரமாக இருந்தால்
என்னை கூப்பிடு..

நான் தொலைந்து போனால்
என்னைத் தேடு..

அப்படியே விட்டு விடாதே
நான் எப்போதும் உன்னை
தேடுவேன்!

🥹🥹🥺

@KavithaigalOLBN


என்னைத் தவிர யாரோடு பேசுகிறாய்?!

என்னைவிட யாரை நேசிக்கிறாய்?!

என்னைக்காட்டிலும் யாருக்கு முக்கியத்துவம் தருகிறாய்?!

இப்படியான கேள்விகள் எல்லோர் மனங்களிலும் இல்லாமலில்லை..

கேட்கப்படாமல் இருக்கலாம்!

உண்மையான நேசம் இருக்குமிடத்தில்
இந்த வியாதி
இருந்தே தீரும்!!

❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

@KavithaigalOLBN

Показано 20 последних публикаций.