The Seithikathir®


Гео и язык канала: Индия, Тамильский
Категория: Новости и СМИ


WELCOME! SUPPORT OUR JOURNALISM!
• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.
WE THANK YOU FOR YOUR TRUST IN US.

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Тамильский
Категория
Новости и СМИ
Статистика
Фильтр публикаций


💥 தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கக் கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

அரசு பள்ளிகளில் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினால் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசுகள் தனிக்கொள்கையை கடைபிடிக்க வகை செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாறாக தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதை மத்திய அரசு தவிர்த்திருக்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான பி.எம்ஸ்ரீ பள்ளிகளை தமிழக அரசு திறக்க வேண்டும்; அவற்றில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க தமிழக அரசு மறுத்து விட்டதால், ஒருங்கிணைந்தக் கல்வித் திட்டத்தின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2,401 கோடி நிதியை வழங்காமல் பல மாதங்களாக மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. இந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

புதியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதைக் காரணம் காட்டி மத்திய அரசு நிதியை வழங்க மறுப்பதை ஏற்க முடியாது என்று பல தருணங்களில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதிபட தெரிவித்திருக்கிறது.

ஆனால், மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் மும்மொழிக் கொள்கையை திணிப்பதில் உறுதியாக இருக்கிறது என்பதைத் தான் மத்திய கல்வியமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன. மும்மொழித் திணிப்பு என்ற போர் தமிழகத்தின் மீது 80 ஆண்டுகளுக்கு மேலாக தொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்தப் போரில் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டு மக்கள் தான் வென்று வருகின்றனர்.

> விகடன் முடக்கம் ஏன்? Watch: https://youtu.be/B8se18EZkPk

1963-&ஆம் ஆண்டில் இந்தித் திணிப்பு குறித்த சர்ச்சை எழுந்த போது, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே அலுவல் மொழியாக நீடிக்கும்; இந்தி திணிக்கப்படாது என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதை மீறும் வகையில் மத்திய அரசு செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

பொதுப்பட்டியலில் கல்வி இருக்கும் நிலையில், தேசிய அளவிலான கல்விக் கொள்கையை வகுப்பதற்கு மத்திய அரசுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளதோ, அதே அதிகாரம் மாநில அரசுக்கும் உள்ளது. அதன்படி கடந்த காலங்களில் பல மாநிலங்கள் தங்களுக்கென்று தனிக் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தி உள்ளன. இப்போதும் கூட தமிழ்நாடு அரசு மாநிலக் கல்விக் கொள்கையை வகுத்து இன்னும் செயலாக்கம் செய்யாமல் வைத்திருக்கிறது. இது மாநில அரசின் உரிமை. இதை மத்திய அரசு மதிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அந்த நிதி தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கு தானே தவிர, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்காகவோ, முன்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகவோ வழங்கப்படும் வெகுமதி அல்ல. அதனால், தேசியக் கல்விக் கொள்கையையும், தமிழ்நாட்டிற்கான நிதியையும் இணைத்து மத்திய அரசு குழம்பிக் கொள்ளக் கூடாது. மத்திய அரசு நிதி ஒதுக்காததால், அரசு பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடக்கின்றன. எனவே, நியாயத்தையும், மாநில அரசின் உரிமைகளையும் மதித்து ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.


💥 விகடனின் வீழ்ச்சியை காட்டுகிறது: துக்ளக் சத்யா, மூத்த பத்திரிகையார்

> ஏன் முடக்கம்? Watch: https://youtu.be/B8se18EZkPk

விகடன் கார்ட்டூன் மிகப் பெரும்பாலானோரைப் புண்படுத்தியுள்ளது.

உண்மையில் அது கார்ட்டூனே அல்ல. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அப்பத்திரிகை, பிரதமர் மீதான தன் வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிடம் இந்தியா சரணடைந்து விட்டது, மோடியை ட்ரம்ப் அடிமைப்படுத்தி விட்டார் என்பது விகடனின் விமர்சனமாக இருந்தால், கார்ட்டூனை வேறு விதமாகப் போட முடியும். ட்ரம்புக்கு மோடி சேவகம் செய்வது போலவோ, அவர் ஸ்டைலாக உட்கார்ந்திருக்க, இவர் கை கட்டி பணிந்து நிற்பது போலவோ கார்ட்டூன் போட்டிருக்கலாம். அது கருத்து விமர்சனமாக இருந்திருக்கும்.

எந்த கருத்தையும் விமர்சிக்க பத்திரிகைகளுக்கு உரிமை உண்டு. ஆளையே தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அழகல்ல. அதுவும் சொந்த நாட்டின் பிரதமர் இன்னொரு நாட்டில் சிறைப்பட்டுள்ளது போன்ற சித்தரிப்பு நாட்டுப்பற்று அற்றது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஒரு பத்திரிகையாளன் இன்னொரு பத்திரிகையை விமர்சிக்க நேர்வது வருத்தம் தருகிறது. ஆனால், பத்திரிகை உணர்வு என்ன, எந்த உணர்வையும் விட தேச உணர்வு மேலானது என்பதில் அடியேனுக்கு குழப்பம் இல்லை.

விகடன் நினைப்பது போல, அமெரிக்காவிடம் இந்தியா அடி பணிந்து விட்டது என்ற கருத்தும் தவறு.

ட்ரம்ப், மோடி மீது அதிகபட்ச மரியாதையைக் காட்டியிருக்கிறார். அமெரிக்காவில் மோடி நடத்தப்பட்ட விதம் இந்தியாவின் பெருமையை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.

இந்தியா எந்த உரிமையையும் அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்து விடவில்லை. மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரியை இந்தியாவுக்கு விதிக்கவில்லை. மோடி அமெரிக்காவுக்கு சென்றதன் நோக்கம் நிறைவேறியுள்ளது.

மோடியைப் பாராட்டி ஆதாயம் சம்பாதிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை. நாடு கண்ட பிரதமர்களில் மோடி சிறந்தவர் என்பதே என் பார்வை.

' தன் நாட்டுக்காக மோடி வாதாடுவது போல என்னால் முடியவில்லை ' என்று ட்ரம்பே ஒப்புக்கொண்டுள்ளார். ஊழலற்ற, நாடுப்பற்றும் நிர்வாகத் திறமையும் மிகுந்த மோடி ஒவ்வொரு கட்டத்திலும் தன் பதவிக்கு உண்மையாக இருப்பதாகவே பார்க்கிறேன்.

அவரை இப்படியொரு தரக்குறைவான கார்ட்டூன் மூலம் ஒரு பெரிய பத்திரிகை விமர்சித்திருப்பது அதன் வீழ்ச்சியையே காட்டுகிறது.

மோடியை இழிவுபடுத்துவதே வீரம் என்ற மோடி எதிர்ப்பாளர்களின் பிரசாரமே இதற்குக் காரணம்.


📌 கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாஜக அரசின் ஃபாசிசத் தாக்குதலைக் கண்டிக்கிறோம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

> ஏன் முடக்கம்? Watch: https://youtu.be/B8se18EZkPk

நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தமிழ் வார இதழான ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடன் ஆகியவை கருத்துச் சுதந்திரத்தை உறுதியாகப் பற்றி நிற்கும் ஒரு ஊடகமாகும். நேற்று இரவு முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயனர்கள் விகடன் இணையதளத்தை அணுக முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விகடன் இணைய தளம் முடக்கப்பட்டது குறித்து இதுவரை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. இது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. சட்டத்துக்குப் புறம்பாக விகடன் இணைய தளம் முடக்கப்பட்டிருப்பது விமர்சனத்தை சகித்துக்கொள்ள முடியாத பாஜக அரசின் ஃபாசிசப் போக்கையே காட்டுகிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி, ‘விகடன் பிளஸ்’ என்னும் விகடனின் இணைய இதழின் அட்டையில் ஒரு கேலிச் சித்திரம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்காமல் பிரதமர் மோடி மௌனம் காத்ததை விமர்சித்து அந்த கேலிச் சித்திரம் வரையப்பட்டுள்ளது. உண்மையில் அந்த கேலிச் சித்திரம் கோடிக் கணக்கான இந்திய மக்களின் உணர்வின் வெளிப்பாடாக இருந்தது. அதனால் அது சமூக வலை தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. இது பாஜக ஆதரவாளர்களுக்குக் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக தமிழ்நாட்டுத் தலைவர் திரு. அண்ணாமலை விகடனுக்கு எதிராக ஒன்றிய அரசிடம் முறையிட்டதாகவும் , அதற்குப் பின்னரே விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கட்சிக்காரர்களே அரசாங்கத்தின் இணை அதிகார அமைப்பாகச் செயல்படும் இந்தப் போக்கு இந்திய சனநாயகம் குறித்த மிகப்பெரிய கவலையைக் கிளப்புகிறது.

இணையதளங்களை முடக்கும் நடவடிக்கைகள், தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act), 2000- இன் 69A-பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சட்டத்தின் விதிகள் IT (Procedure and Safeguards for Blocking) Rules, 2009 கடைப்பிடிக்கப்பட வேண்டும். அந்த சட்டத்தின் பிரிவு 69A(1) இன்படி ஒரு இணையதளம் முடக்கப்படுவதற்கு முன்பு அதில் வெளியான செய்தியானது தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நாட்டின் இறையாண்மை, வெளிநாட்டு உறவுகள், போன்றவற்றுக்கு எதிராக அது இருக்கிறது என்பது குற்றம் சாட்டப்படுபவருக்கு எழுத்துபூர்வமாகத் தரப்பட்டிருக்க வேண்டும்.

விதி 8ன் படி, இணையதளத்தை முடக்கும் முன், பாதிக்கப்பட்ட தரப்புக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும்; அவர்கள் விளக்கம் தருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
தடை விதிக்கப்பட்டால், அதற்கான காரணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றத்தை நாட முடியும். ஆனால், விகடன் குழுமத்துக்கு அப்படி எந்தவிதத் தகவலும் கொடுக்கப்படவில்லை. இது சட்டத்தை மீறிய செயலாகும்.

விகடன் இணையதளத்தை முடக்கியிருப்பது, ஊடகச் சுதந்திரத்திற்கும், மக்களாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாகும். எனவே, ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உடனடியாக இணைய தள முடக்கத்தை நீக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்:
டாக்டர் தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.


📌 கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதா? - விஜய் கேள்வி

> ஏன் முடக்கம்? Watch: https://youtu.be/B8se18EZkPk

ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியது ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.

- விஜய், தவெக தலைவர்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29


📌 விகடன் இணையதளத்தை முடக்கியிருப்பது சனநாயகப்படுகொலை! - சீமான்

> முடக்கியது ஏன்? Watch: https://youtu.be/B8se18EZkPk

பிரதமர் நரேந்திரமோடி குறித்து கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடன் நிறுவனத்தின் இணையதளத்தை ஒன்றிய அரசின் சட்ட அமலாக்கத்துறை முடக்கியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்திய நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு, அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டதைக் கண்டிக்காத ஒன்றிய அரசின் செயல்பாடு குறித்த கருத்துப்படம் வெளியிட்டதற்காக விகடனின் இணையதளத்தையே முடக்கி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கருத்துப்படங்களை வெளியிட்டு அரசுகளின் குற்றம், குறைகளை எடுத்துரைப்பதும், பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தக் கோருவதும், அநீதிகளை எதிர்ப்பதும்தான் ஊடகங்களின் தலையாயக் கடமை; முதன்மைப்பணி! அந்த அடிப்படையில், இந்திய நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டது ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருத்த அவமானம்; தலைகுனிவு என்பதைத்தான் அந்தக் கருத்துப்படம் எடுத்துரைக்கிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

அமெரிக்க அரசின் ஆணவப்போக்கைத் தட்டிக் கேட்க வக்கற்ற ஒன்றிய அரசின் கையாலாகாத்தனத்தையே விகடன் கருத்துப்படமாக வெளியிட்டிருக்கிறது. அது பிழையோ, குற்றமோ, சட்டவிரோதமோ இல்லை. அது விகடன் நிறுவனத்தின் கருத்துரிமை; விமர்சனப்பார்வை! அதனை செய்தற்காகவே விகடனின் இணையதளத்தை முடக்கியது சனநாயகப்படுகொலை! பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை எல்லாம் இருந்தால்தான் அந்நாடு சுதந்திர நாடு! அத்தகைய அடிப்படை உரிமைகளே இங்கு பறிக்கப்படுமென்றால், இது விடுதலைபெற்ற நாடா? இல்லை! அடிமை நாடா? எனும் கேள்வி எழுகிறது. ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் இந்நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, எழுத்துரிமை ஆகியவற்றிற்கு எதிரான கொடும் அச்சுறுத்தல். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
ஒரு கருத்துப்படம் வெளியிட்டதற்காக நூற்றாண்டுப் புகழ்பெற்ற விகடன் நிறுவனத்தின் இணையப்பக்கத்தையே மொத்தமாக முடக்குவார்களென்றால், இங்கு அவசரநிலை நிலவுகிறதா? இல்லை! மக்களாட்சி நீடிக்கிறதா? எதேச்சதிகாரப்போக்கின் உச்சம்! இது சனநாயகத்தின் நான்காம் தூணாக இருக்கக்கூடிய ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடி அச்சுறுத்தல்! இந்தியக் குடிமக்களின் கை,கால்களில் விலங்கிட்ட அமெரிக்க அரசின் செயல்பாட்டைக் கண்டிக்காத பாஜக அரசின் செயல்பாடு தேசப்பக்தி! அதனை எதிர்த்துக் குரலெழுப்பிய விகடன் நிறுவனத்தின் செயல்பாடு தேசவிரோதமா? வெட்கக்கேடு! விகடனின் இணையப்பக்கத்தை முடக்கியதன் மூலம் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தனது பாசிச முகத்தை மீண்டுமொரு முறை வெளிக்காட்டியிருக்கிறது.

இச்சமயத்தில், கருத்துரிமைக்கு எதிராகக் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ள விகடன் நிறுவனத்திற்கு தார்மீக ஆதரவாக நாம் தமிழர் கட்சி துணைநிற்குமென உறுதியளிக்கிறேன். இத்தோடு, முடக்கப்பட்டுள்ள விகடன் இணையதளத்தை உடனடியாக விடுவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன்.

- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி


💥 மும்மொழிக் கொள்கையை வலிந்து திணிப்பதா?: விஜய்

மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?; மாநில மொழிக் கொள்கைக்கு சவால் விடுத்து நிதி ஒதுக்கமாட்டோம் என்று கூறுவது பாசிச அணுகுமுறை

ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று எதிர்ப்போம் - தவெக தலைவர் விஜய்


💥 விருப்பம் உள்ளோர் இந்தியை கற்றுக் கொள்ளட்டும்: சீமான்

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கிறது; பிரித்தாளும் சூழ்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது விருப்பம் உள்ளோர் இந்தியை கற்றுக் கொள்ளட்டும்; எதற்கு திணிக்க வேண்டும்?

தாய் மொழிதான் கொள்கை மொழி; தொடர்பு மொழிக்கு ஆங்கிலம் உள்ளது; ஒரு மொழியை திணித்தால் இந்தியா பல நாடுகளாக மாறும்

-நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


💥 ஜெர்மனியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அதிரடி பேச்சு

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் (வொர்ல்ட் எகனாமிக் ஃபாரம், ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் இருக்கும் அரசு அதிகாரிகள், ஆக்டிவிஸ்ட்டுகள், என்.ஜி.ஓக்கள், வர்த்தக நிறுவனங்கள்) எப்படி ஜனாநாயகம் பற்றி முடிவெடுக்கலாம்? (மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே அதைச் செய்யச் சரியானவர்கள்).

அதே போல, வெவ்வேறு சமூகங்கள் வெவ்வேறு பழக்கங்களை, விதிகளைக் கொண்டு இயங்குகின்றன. அதை மதிக்காமல், உலகில் ஒரே 'உண்மை' தான் இருக்கிறது (one truth, one judgement, one norm) - அது பரப்பப்பட வேண்டும் (must be 'preached') என்கிற (மேற்கத்திய) கொள்கை பிரச்சினைக்குரியது.

இந்த பரப்புரையை / propoganda பண்ணுபவர்கள்: think tanks, rating agencies, media! இம்மாதிரி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் திணிப்பதற்கு எதிர்ப்பு கிளம்புகிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

அதே போல, ஒவ்வொரு நாட்டிலும் அதிருப்தியாளர்கள் இருப்பார்கள். அவர்களை பிற நாட்டு தூதுவர்கள் சந்தித்து தங்களுக்கு சாதகமாக (நாட்டுக்கு பாதகமாக) வேலை செய்ய வைக்கிறார்கள்.

இந்தியாவில் மேற்கத்திய நாட்டின் தூதர்கள் செய்வதில் (கேடுகெட்ட வேலைகளில்) ஒரு பகுதியை எங்கள் தூதுவர் செய்தால், நீங்கள் அனைவரும் போர்க் கொடி தூக்குவீர்கள் (என்பதை நினைவில் கொள்க"!!

"...What do western ambassadors do in India, if my ambassador, if my ambassador does a fraction of that, you will all be up in arms..." EAM Dr S Jaishankar at Munich Security Conference on outreach to outliers.


💥ஊக்க மருந்து விவகாரம்: நெ.,1 வீரர் சின்னருக்கு 3 மாதம் தடை

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக, உலகின் நெ.,1 டென்னிஸ் வீரர் சின்னருக்கு மூன்று மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


💥 விகடன் இணையதளம் முடக்கப்பட்டதா? விகடன் குழுமம் விளக்கம்!

கருத்து சுதந்திரத்திற்காக களத்தில் நிற்போம்...

விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.

முன்னதாக விகடன் இணைய இதழான 'விகடன் ப்ளஸ்' இதழில் (பிப்ரவரி 10, திங்கள்] அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

#VikatanForFreedomOfExpression

> என்ன கரணம்? Watch: https://youtu.be/B8se18EZkPk




*குறள் எண் : ௧௫௩(153)
*பால் : அறத்துப்பால்
*அதிகாரம் : பொறையுடைமை

*குறள் :
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.


*உரை :
வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை என்பது, அறிவிலார் செய்தத் தீங்கைப் பொறுத்தலாகும்.

*English :
To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.

தி ஆ ௨௦௫௬ கும்பம் (மாசி -௪)
தமிழ் வாழ்க


கல்வி நிதி விவகாரத்தில் பிளாக்மெயில் செய்வதா? - முதல்வர்

மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது' என்று Blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.

இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? என கல்வி அமைச்சரால் கூற முடியுமா?

எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம், உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்.




BREAKING: டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி.

டெல்லி ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு.

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்ல, ஒரே நேரத்தில் ரயில்நிலையத்தில் குவிந்த போது நிகழ்ந்த சோகம்.




உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல - அமைச்சர் அன்பில் மகேஸ்.

உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல, எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல

- “தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும்” என மத்திய கல்வியமைச்சர் கூறிய நிலையில், அறிஞர் அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவு


தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி - மத்திய கல்வித் துறை அமைச்சர்.

தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும்.

ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை.

அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது - மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.




💥 வேலையை நோக்கி ஓடி...!

₹7.8 கோடி சம்பளத்துடன் பணிபுரிந்தாலும் மகிழ்ச்சி இன்றி தான் வெறுமையாகவும், குழப்பமாகவும் உணர்வதாக Blind சமூகவலைதளத்தில் பகிர்ந்து வேதனை தெரிவித்த நெட்டிசன்!

பதவி உயர்வுக்காக தனது மனைவி, மகளுடன் நேரம் செலவழிக்காமல், ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்துள்ளார். ஆனால் இப்போது ஆசைப்பட்ட வேலை கிடைத்தாலும், தனது மனைவி விவாகரத்து பெற்றதாக தெரிவித்துள்ளார்.

Показано 20 последних публикаций.