The Seithikathir®


Гео и язык канала: Индия, Тамильский
Категория: Новости и СМИ


WELCOME! SUPPORT OUR JOURNALISM!
• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.
WE THANK YOU FOR YOUR TRUST IN US.

Связанные каналы  |  Похожие каналы

Гео и язык канала
Индия, Тамильский
Категория
Новости и СМИ
Статистика
Фильтр публикаций


T 20 உலக கோப்பை:

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.

அயர்லாந்து அணி நிர்ணயித்த 97 ரன்களை 12.2 ஓவர்களில் எட்டியது இந்தியா.


டெல்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு.


Видео недоступно для предпросмотра
Смотреть в Telegram
சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டார்.

சுனிதாவும் பர்ச் வில்மரும் ஒரு வாரத்திற்கு சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கிய பின்னர் வரும் 14ஆம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளனர்.

பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், விண்வெளி பயணத்தை மேற்கொள்ளும் வகையில் ஸ்டார் லைனர் என்கிற திட்டத்தின் அடிப்படையில் புதிய விண்கலத்தை வடிவமைத்துள்ளது.


T 20 உலக கோப்பை:

இந்திய அணியின் பந்துவீச்சில் சுருண்டது அயர்லாந்து அணி.

16 ஓவர்களில் 97 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அயர்லாந்து.


அரசியல் சாசனத்தின் மாண்புகளை காப்பாற்ற நினைக்கும் அத்தனை கட்சிகளையும் இந்தியா கூட்டணி திறந்த மனதுடன் வரவேற்கிறது: டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு




BREAKING: தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு.

டெல்லியில் நடந்த NDA ஆலோசனை கூட்டத்தில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு.


இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

ஆலோசனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல், பிரியங்கா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்பு.


பாஜக ஆட்சியமைக்க நிதிஷ், சந்திரபாபு ஆதரவு.

மத்தியில் பாஜக ஆட்சியமைக்க நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவு கடிதங்களை வழங்கினர்.

தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வென்ற நிலையில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு.

தேர்தலில் பெரும்பான்மை பெறாத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக.


டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது;

பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார், தெலுங்கு தேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்பு


தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறது, அதில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழ்நாட்டிலிருந்து NDA கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது.

அதை அடைய முடியவில்லை என்பது வருத்தம்-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

பாஜக இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என மக்கள் சொல்கிறார்கள்.

மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்.

எங்களின் இலக்கு பெரியது அதற்காக தான் வேலை செய்கிறோம்.

முதன்முதலாக திராவிட கட்சிகள் கூட்டணியில் இல்லாமல் தனித்து நின்று பெரிய அளவில் வாக்குப் பெற்றுள்ளோம்-அண்ணாமலை.


JUST IN:

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரையை அளித்தார் மோடி.

17-வது மக்களவையை கலைக்க இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானித்த நிலையில், அதற்கான நகலை குடியரசுத் தலைவரிடம் அளித்தார் மோடி.




தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் கட்சிகள், கூட்டணி வாரியாக வாக்கு சதவீதம்!

திமுக கூட்டணி: 46.9%
அதிமுக கூட்டணி: 23.05%
பாஜக கூட்டணி: 18.2%
நாம் தமிழர் கட்சி: 8.1%


வரும் சனிக்கிழமை பதவி ஏற்கிறார் பிரதமர் மோடி


டெல்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்!


முடிவுக்கு வந்தது 24 ஆண்டு கால ஆட்சி.

ஒடிசா சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பாஜக, அங்கு ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக்; ஆளுநர் ரகுபர் தாஸை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

2000, 2004, 2009, 2014, 2019 என தொடர்ந்து 5 தேர்தல்களில் வெற்றி பெற்று 24 ஆண்டுகள் ஒடிசா முதலமைச்சராக நவீன் பட்நாயக் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.


இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜெய்ஸ்வி யாதவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி வரும் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரே விமானத்தில் பயணம் செய்து வருவதாக தகவல்

சில மாதங்களுக்கு முன்பு வரை நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில்தான் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தேஜாஸ்ரீ யாதவை நாடு முழுவதும் நடந்த அத்தனை முக்கிய கூட்டங்களுக்கும் உடன் அழைத்துச் சென்று இருந்தார் நிதீஷ்குமார்


தன்னைப் பொறுத்தவரை அரசியலில் கூட்டணி விஷயங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை விட தேச நன்மை மற்றும் மக்கள் நன்மைக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருவேன் என ஆந்திராவில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வராக பதவி ஏற்க உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு வெளிப்படையாகவே கூறியுள்ளார்


இன்று மாலை 4 மணிக்கு பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம்

கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்

பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் இன்று ஆலோசனை

அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடமளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது

Показано 20 последних публикаций.