John F Kennedy அவர்களின் எச்சரிக்கை : "ஒரு வெளிப்படையான சுதந்திர சமூகத்தில் 'ரகசியம்' என்ற சொல்லே வெறுக்கப்படவேண்டியதாகும்; ஒன்றுபட்ட மக்களாக நாம் இயல்பாகவும் வரலாற்று ரீதியாகவும் அரசாங்கம் இரகசியம் காப்பதை எதிர்த்துவந்திருக்கிறோம் ... பல ஆண்டுகளுக்கு முன்பே, நமது முன்னோர், மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மைகளை, நியாயமற்ற முறையில் மறைப்பதினால் ஏற்படும் ஆபத்துகள், அதை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் ஆபத்துகளை விட அதிகம் என்று மக்கள் உணர்ந்து முடிவு செய்திருக்கின்றனர்."
John F Kennedy படுகொலை பற்றிய உண்மைகளை மறைக்கவும் அடக்கவும் உளவுத்துறை அதிகாரிகள் 60-ஆண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்திய பொய்கள் மற்றும் ரகசியக்காப்பு, தவறான தகவல்கள், கற்பனைக் கருத்தாக்கங்கள் மற்றும் அவதூறு பரப்பும் உத்திகள், பின்னர் வந்த பல நெருக்கடிகளை நியாமற்ற வகையில் கையாள்வதற்கான வழிகாட்டியாக அமைந்துள்ளது — Martin Luther King மற்றும் Robert F Kennedy படுகொலைகள், வியட்நாம் போர், 9/11, ஈராக் போர் மற்றும் COVID — இவை ஒவ்வொன்றும் இராணுவ/மருத்துவ தொழில்துறைக் கூட்டமைப்பால் நமது உன்னதமான ஜனநாயகத்தை நாசப்படுத்துவதை துரிதப்படுத்தியுள்ளது மற்றும் மொத்தத்துவத்தை(Totalitarianism) நோக்கி நம்மைத் தள்ளியுள்ளது.
"தனது மக்களை நம்பாத ஒரு நாடு, தனது மக்களுக்கு பயப்படும் ஒரு நாடாகும்." தகவல்களை மறைக்கும் ஒரு அரசாங்கம், தனது குடிமக்களின் சுயாதீன முடிவுகளை எடுக்கும் திறன் மற்றும் ஜனநாயகத்தில் தீவிரமாக பங்கேற்கும் திறனைப் பற்றி இயல்பாகவே பயப்படுகிறது.
குடிமக்களின் நம்பிக்கையை மேம்படுத்தும் மற்றும் இந்த பேரழிவு இரகசியக்காப்பு நடைமுறைகளை மாற்றுவதற்கான முதல் படியை எடுத்தமைக்கு ஜனாதிபதி டிரம்ப் அவர்களுக்கு நன்றி.
- Robert F Kennedy Junior (Bobby)
https://x.com/RobertKennedyJr/status/1882848590563065858?t=ufs1Pz27uQBCkuRmkt2nEQ&s=19