بسم الله الرحمن الرحيم
தஃப்ஸீர் ஆயதுல் குர்ஸி - தொடர்ஆயதுல் குர்ஸியில் அல்லாஹ் தபாரக வ தஆலா தன்னுடைய மகத்துவம் மிக்க பெயர்களில் ஒன்றான அல் ஹை (الْحَيُّ) என்ற பெயரை குறிப்பிட்டுள்ளான்.
அல் ஹை (الْحَيُّ) என்பது எப்பொழுதும் என்றென்றும் ஜீவித்துள்ளவன் என்ற கருத்தை தரக்கூடிய பெயராகும். அல்லாஹ்வுடைய வாழ்க்கை என்பது பரிபூரணமான வாழ்க்கை ஆகும். அதற்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை.
அல்லாஹ் தபாரக வ தஆலா கூறுகிறான்,
وَتَوَكَّلۡ عَلَى ٱلۡحَيِّ ٱلَّذِي لَا یَمُوتُ
மரணிக்காத எப்பொழுதும் என்றும் ஜீவித்திருக்கக்கூடிய அந்த அல்லாஹ்வின் மீது நீங்கள் பொறுப்பு சாட்டுங்கள்
அல் குர்ஆன்: சூரா அல் ஃபுர்கான்: 25:58
ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் ஒரு துஆவில் கூறினார்கள்,
أنت الأولُ فليس قبلكَ شيءٌ ، وأنت الآخِرُ فليس بعدكَ شيءٌ
அல்லாஹ்வே! நீதான் ஆரம்பமானவன் உனக்கு முன் ஒன்றும் இல்லை; அதே போல் நீ தான் இறுதியானவன் உனக்குப் பிறகு ஒன்றும் இல்லை.
நூல்: இப்னு மாஜா 3831, இது ஸஹுஹான ஹதீஸ் ஆகும்.
எனவே الحياة அல் ஹயா அல்லாஹ்வுடைய வாழ்க்கை என்பது பரிபூரணமான வாழ்க்கை ஆகும். அதற்கு ஒரு குறைபாடும் ஏற்படாது மேலும் அதற்கு ஒரு பொழுதும் மரணமும் வர முடியாது.
விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
~•~•~•~•~•~
குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்...
t.me/al_ilmush_sharee🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي