என்றும், قيومية என்ற பண்பை உடைய قَيِّم، قَيَّام، قَيُّوم என்ற மூன்று பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பெயர்களையும், பண்புகளையும் உள்ளடக்கிய
قَيَّامُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
கையாமுஸ் ஸமாவாதி வல் அர்ல்
என்ற வாசகத்தைக் கொண்டு ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்துள்ளார்கள்.
அதேபோல் அல்லாஹ் தபாரக வ தஆலா الْحَيُّ الْقَيُّومُ என்ற இந்த இரண்டு பெயர்களையும் குர்ஆனில் மூன்று இடங்களில் குறிப்பிட்டுள்ளான்.
1) ஆயதுல் குர்ஸி
2)சூரா ஆலு இம்ரான் (அல்குர்ஆன் 3:2)
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُ
அல்லாஹ் (அவன் எத்தகையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை. (அவன்) நித்திய ஜீவன். (என்றும்) நிலையானவன்.
3) சூரா அத் தாஹா (அல்குர்ஆன் 20:111)
وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَيِّ الْقَيُّوْمِ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا
நிச்சயமாக அனைத்து முகங்களும் அல் ஹையுல் கையூம் என்ற நிலையானவனும் நித்திய ஜீவனுமாகிய அல்லாஹ்விற்கே கீழ்படிந்து விட்டது. யார் அநியாயத்தைச் சுமந்து கொண்டானோ அவன் திட்டமாக நஷ்டமடைந்து விட்டான்.
மேலும், சுனனுந் நஸாயில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ் அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் துஆ செய்யும் பொழுது
يا حَيُّ يا قَيُّومُ
என்ற அல்லாஹ்வுடைய இந்த இரண்டு பெயர்களை குறிப்பிட்டு அல்லாஹ்வை அழைத்து துஆ செய்யக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.
விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
🎧 உரையை செவிமடுக்க...
t.me/al_ilmush_sharee/2168~•~•~•~•~•~
குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்...
t.me/al_ilmush_sharee🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي