நான் உன் சிரிப்பை பார்க்கவில்லை;
உன் கண்களை தேடவில்லை;
உன் அழகை ரசிக்கவில்லை..
இவை எதுவும் இதுவும் இன்றியும்
உன்னை காதலித்தேன் என் கற்பனையில்..
சொட்ட சொட்ட நனைகின்றேன்
மழைத் துளிகளால் அல்ல
கண்ணீர் துளிகளால்..
உண்மையான அன்பை சொல்லி புரிய வைக்க முடியாது அந்த அன்புக்கு உரியவர்களால் மட்டுமே உணர முடியும்..
மறக்க முடியாத நினைவும் நீ தான்
வெறுக்க முடியாத உறவும் நீ தான்..
என்றுமே உன்னிடம் தோற்றுக் கொண்டுதான் இருக்கின்றேன்
அன்று உன்னை மறக்க தெரியாமல்
இன்று உன்னை வெறுக்க தெரியாமல்..
உன் முகம் பார்க்க முடியவில்லை
உன் குரல் கேட்க முடியவில்லை
மனம் மட்டும் உன்னை தேடுகிறது..
உன்னை பார்க்காமல் உன்னுடன் பேசாமல்
இருந்து விட முடிகின்றது ஆனால்
உன்னை நினைக்காமல் மட்டும் இருந்து விட முடியவில்லை..
நீ எங்கு இருக்கின்றாய் என்று தெரியவில்லை
ஆனால் உன்னை நினைக்கும் போதெல்லாம்
வந்து விடுகிறாய் கண்களின் வழியாய் கண்ணீராக..
உனக்காக எல்லோரையும் வெறுத்தேன்
நீ என்னை வெறுப்பாய் என்று தெரியாமல்..
இன்று நீ என்னை பிரிந்தாலும் மறந்தாலும்
என்றாவது ஒரு நாள் நீ என்னை
நினைக்கும் போது நான் உன் கண்களில் இருப்பேன்
கனவாக அல்ல கண்ணீர் துளிகளாக..
உண்மையான காதல் இருந்தால்
வார்த்தை தேவையில்லை
நினைவுகள் கூட பேசும்..
உயிராக அவளை நினைத்தேன் அப்போது
எனக்கு புரியவில்லை உயிர் எப்போது வேண்டுமானாலும் பிரியும் என்று..
நீ இல்லாத கடந்த காலத்தைப் பற்றி
எனக்கு தெரியாது..
ஆனால்
நீ இல்லாத எதிர்காலம் இனி எனக்கு கிடையாது..
இந்த உலகில் இது வரை நேசித்த அனைத்தையும் விட
உன்னை நான் அதிகமாக நேசித்தேன்..
கண்களை மூடி தவம் இருக்கின்றேன்
நீ என் கனவில் வருவாய் என்று..
ஒரு நாள் நான் நீயாக வேண்டும்
நீ நானாக வேண்டும்
அன்று புரியும் உனக்கு நான் படும் வேதனை..
அடிக்கடி பார்க்கிற எல்லோரையும் நேசிக்க முடியாது
ஆனால் நேசிக்கின்ற ஒருவரை அடிக்கடி பார்க்க முடியாது..
உன்னோடு நான் இருந்த நாட்களை விட
உன் நினைவுகளோடு வாழும் வாழ்க்கை சுகமானது..
ஆயிரம் பேர் பல மணி நேரம் பேசினாலும்
நீ பேசும் அந்த சில நிமிடங்களுக்கு தான்
என் மனம் எங்கித் தவிக்கிறது..
அன்பு நிறைந்த உள்ளம் தான்
அதிகம் சண்டை போடும் பிரிவதற்கு அல்ல
பிரிய கூடாது என்பதற்காக..
உயிர் விட்டு போகும் உடலுக்காக விடும்
கண்ணீரை விட கொடுமை
உயிராய் காதலித்தவர் விட்டுப் பிரியும் போது
கண்களில் இருந்து வடியும் சிறு சிறு கண்ணீர்..
நீர் இல்லாமல்
வாடும் செடி
மழை இல்லாமல்
வாடும் பூமி
நீ இல்லாமல்
வாடும் நான்..
வருவாயா அன்பே என்னைக் காண?
🌺🌕❤️
@KavithaigalOLBN