The Seithikathir®


Kanal geosi va tili: Hindiston, Tamilcha


WELCOME! SUPPORT OUR JOURNALISM!
• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.
WE THANK YOU FOR YOUR TRUST IN US.

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Tamilcha
Statistika
Postlar filtri


இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட்டுக்கு எதிராக கைது வாரண்ட்டை பிறப்பித்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.

போரில் பாஸ்தீன மக்கள் மரணம் அடைந்தது தொடர்பாக இஸ்ரேல் அளித்த விளக்கங்கள் நிராகரிப்பு.


ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொழில் ரீதியாக அல்ல, தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்.

“தனிப்பட்ட காரணங்களுக்காக ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம்"

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.


BREAKING: உக்ரைன் மீது சக்திவாய்ந்த ICBM ஏவுகணையை கொண்டு ரஷ்யா தாக்குதல்.

உக்ரைனின் நிப்ரோ நகரத்தை குறிவைத்து ரஷ்யா முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கொண்டு (INTER CONTINENTAL BALLISTIC MISSILE) தாக்குதல்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி.


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடக்கம்.

நாளை (நவ. 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.


ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாலை மறியல்.

என்.எஸ்.சி. போஸ் சாலையில் அமர்ந்து மறியல் செய்வதால் போக்குவரத்து பாதிப்பு.


டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு.

அதானி மீது லஞ்ச புகார்கள் உள்ளபோதும் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அவர் சுதந்திரமாக வலம் வருகிறார்.

இந்த புகாரில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தொழிலதிபர் கவுதம் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

தொழிலதிபர் அதானியை பிரதமர் நரேந்திர மோடி ஏன் பாதுகாக்கிறார்?

அதானி முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.


"அரியலூர் அழகேசா நீ ஆண்டது போதாதா, நாங்கள் மாண்டது போதாதா” - திமுகவின் கோஷத்தையே திமுக அரசுக்கு எதிராக திருப்பிவிட்ட அன்புமணி ராமதாஸ்!

வேலூரில் 13 வயது சிறுமி மது போதையில் இருந்த
மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை: ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த மது போதையில் இருந்த 3 மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

இரவு நேரத்தில் இயற்கையின் அழைப்புக்காக வீட்டிற்கு அருகில் உள்ள புதர் பகுதிக்கு சென்ற சிறுமியை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மூவர் தூக்கிச் சென்று அருகில் உள்ள கல்குவாரியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியைக் காணாமல் தேடிய அவரது தந்தை அருகில் உள்ள கல்குவாரியிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிச்சென்று காப்பாற்றியுள்ளார். இது குறித்து அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை அளிக்க புகாரை வாங்க மறுத்த காவலர்கள், இன்னொரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். அங்கும் புகார் பெற்றுக் கொள்ளப்படாத நிலையில், சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதற்கு பிறகு தான் முதல் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டுள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவை அனைத்தையும் கடந்து 13 வயது சிறுமிக்கு அவர் வாழும் வீட்டுக்கு அருகிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டில் எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெறுகிறது? அதை விடக் கொடுமை என்னவென்றால், இத்தகைய குற்றச்சம்பங்கள் நடக்காமல் தடுத்திருக்க வேண்டிய காவல்துறை, சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்த புகாரைக் கூட வாங்காமல் அவரது குடும்பத்தினரை அலைக்கழித்திருக்கிறது.

அனைத்துக் குற்றங்களுக்கும் மூல காரணம் மது மற்றும் போதைப்பழக்கங்கள் தான்; அதனால் அவற்றுக்கு முடிவு கட்டுங்கள் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒருபுறம் போதையின் பாதையை தவிருங்கள் என்று கூறிக் கொண்டு இன்னொரு புறம் மது வணிகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கான இலக்கணமா? என்பது தெரியவில்லை. சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதுடன், மதுக்கடைகளை உடனடியாக மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறுமியை பாதுகாப்பதற்குக் கூட திறனற்ற அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை. தமிழக அரசுக்கு எதிராக மக்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றனர். வெகு விரைவிலேயே அவர்கள் கொதித்தெழுவார்கள்.... அரியலூர் ரயில் விபத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்றைய ரயில்வேத் துறை அமைச்சர் அழகேசனுக்கு எதிராக திமுகவினர் முழக்கிய வாசகங்களை (அரியலூர் அழகேசா நீ ஆண்டது போதாதா, நாங்கள் மாண்டது போதாதா”) இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் முழங்குவார்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.


மருத்துவ படிப்பு - நவ.25-ல் சிறப்பு கலந்தாய்வு.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 135 மருத்துவ இடங்களுக்கு நவ.25ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு - மருத்துவக் கல்வி இயக்ககம்.

அன்னை மருத்துவ கல்லூரிக்கு 50 மருத்துவ இடங்களும், எம்ஜிஆர் மருத்துவ கல்லூரிக்கு 50 இடங்கள் கூடுதலாக ஒதுக்கி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு.


தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ரவி உத்தரவு.

டிசம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் நடவடிக்கை.

முந்தைய அதிமுக ஆட்சியின்போது பணம் பெற்றுக்கொண்டு உரிய கல்வித் தகுதி இல்லாத 40 பேரை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களில் அமர்த்தியதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

உரிய தகுதி இல்லாத அந்த 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகையில் இருந்து துணைவேந்தர் திருவள்ளுவனிடம் இருமுறை விளக்கம் கேட்டதாகவும், அதற்கு முறையான பதிலை தராமல் காலம் கடத்தியதாலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தன், சத்யாவதி தம்பதி சிறையில் அடைப்பு.

ஆனந்தன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியையும் கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீசார்.


தமிழகத்தில் நவ.26, 27 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை மையம்.

12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் நவ.25, 26 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21.11.2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.

நவம்பர் மாதம் 26 மற்றும் 27ம் தேதிகளில் ஒருசில இடங்களில் மிககனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது.

நவ.25 முதல் பருவமழை வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானம், மோசமான வானிலையால் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது.

சென்னை – தூத்துக்குடி விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு பயணம் செய்திருந்தார்.

விமானம் மதுரையில் தரையிறங்கியதை அடுத்து கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார் அமைச்சர் எ.வ.வேலு.


லஞ்சப் புகார் எதிரொலி - அதானி பங்குகள் விலை சரிவு.

அரசு அதிகாரிகளுக்கு ₹2,100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றம் குற்றச்சாட்டு எதிரொலி.

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளன.

அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட், அதானி எனர்ஜி, அதானி பவர் நிறுவனங்களின் பங்குகள் விலை தலா 10 %க்கும் மேல் சரிந்து வர்த்தகம்.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160க்கு விற்பனை; கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,145க்கு விற்பனை.


*இன்றைய புத்தக மொழி*
21/11/24
📚📚📚🌹📚📚📚

எல்லாப் பிரச்சனைகளும்
தீர்வுகளைக் கோருவதில்லை.
சிலவற்றிற்கு சமாதானங்கள் போதும்.
இன்னும் சிலவற்றை
கேட்டாலே போதும்.

- ஈரோடு கதிர் -

📚📚📚🌹📚📚📚


மருத்துவ மாணவர் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைப்பு.

மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைப்பு.

அரசு மருத்துவமனைகளில், அரசு சாரா மருத்துவர்களாக பணி செய்யும் மருத்துவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பட்ட மேற்படிப்பு பயில்வோர், 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக பணி செய்ய வேண்டும் என விதி இருந்தது.


அதானி மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு.

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு.

சோலார் எனர்ஜி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களை அதானி லஞ்சமாக கொடுக்க சம்மதித்தார் என குற்றச்சாட்டு.


*குறள் எண் : ௭௨(72)
*பால் : அறத்துப்பால்
*அதிகாரம் : அன்புடைமை

*குறள் :
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.


*உரை :
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும், தமக்கே உரிமை உடையதென வாழ்வர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் வாழ்வர்.

*English :
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.

தி ஆ ௨௦௫௫ நளி (கார்த்திகை -௬)
தமிழ் வாழ்க


ஹாக்கி: கோப்பையை வென்ற இந்தியா.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது.

இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது இந்திய அணி; இந்திய அணி 3ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.



20 ta oxirgi post ko‘rsatilgan.