بسم الله الرحمن الرحيم
أعظم آية في كتاب الله
அல்லாஹ்வுடைய புத்தகத்தில் உள்ள வசனங்களிலேயே மிகவும் மகத்துவம் மிக்க சிறந்த வசனம்٫
آية الكرسي| ஆயதுல் குர்ஸி
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
~•~•~•~•~•~
அல்லாஹவுடைய அடியார்களே! மேல்கூறப்பட்ட இந்த ஆயத்து என்பது ஒவ்வொரு முஸ்லிமும் நன்றாக அறிந்திருக்கக்கூடிய ஒரு ஆயத்து ஆகும். குர்ஆனில் வரக்கூடிய வசனங்களில் மிகவும் சிறந்த வசனம் இந்த வசனம் ஆகும்.
இதைப் பற்றி நபி ﷺ அவர்களிடமிருந்து அறிவிக்கப்படக்கூடிய ஒரு ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிம் -ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில்,
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ، يَا أَبَا الْمُنْذِر أَتَدْرِي أَيُّ آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ مَعَكَ أَعْظَمُ ؟ ". قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ يَا أَبَا الْمُنْذِرِ، أَتَدْرِي أَيُّ آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ مَعَكَ أَعْظَمُ ؟. قُلْتُ { اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ }. فَضَرَبَ فِي صَدْرِي وَقَالَ : " وَاللَّهِ، لِيَهْنِكَ الْعِلْمُ أَبَا الْمُنْذِرِ
ஒரு சந்தர்ப்பத்தில் நபி ﷺ அவர்கள் உபை இப்னு கஅப் என்ற ஸஹாபியிடம்,
யா! அபல் முன்திர் (உபை இப்னு கஅப்)! “அல்லாஹ்வுடைய வேதமான குர்ஆன் வசனத்தில் மிகவும் மகத்துவமிக்க சிறந்த வசனம் எது என்று உமக்கு தெரியுமா?” என்று கேட்டபோது; “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகவும் அறிந்தவர்” என்று முதலாவதாக அவர் பதில் கூறினார். மீண்டும் இரண்டாவது தடவை அதே கேள்வியை நபி ﷺ அவர்கள் கேட்டபோது உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்லாஹூ லா இலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கையூம்” என்ற ஆயத்துல் குர்ஸி வசனம் என்று ரசூலுல்லாவுக்கு பதில் அளித்தார்கள். இந்த பதிலை செவிமடுத்த நபி ﷺ அவர்கள் அந்த ஸஹாபியின் நெஞ்சில் அடித்துவிட்டு கூறினார், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் இந்த அறிவை சுமக்க கூடியவர்; இந்த அறிவு உமக்கு இலகுவாகட்டும்” என்று உபய் இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்காக துஆ செய்தார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் 810.
உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹாபாக்களில் குர்ஆனை மிகவும் சிறப்பாக கற்று இருந்த ஒரு காரியாக இருந்தார்கள். அவரிடமிருந்து குர்ஆனை கற்றுக் கொள்ளுமாறு ஸஹாபாக்களுக்கு ரசூலுல்லாஹி ﷺ அவர்கள் ஏவினார்கள். இந்த செய்தி புகாரி மற்றும் முஸ்லிம் -ல் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக்கூடிய ஹதீஸில் வந்துள்ளது. மேலும், உபை இப்னு கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் சேர்த்து முஆத் இப்னு ஜபல், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் மற்றும் அபூ ஹுதைஃபாவுடைய விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸாலிம் ரலியல்லாஹு அன்ஹும் ஆகிய இந்த நான்கு ஸஹாபாக்களிடமிருந்தும் குர்ஆனை கற்றுக் கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
உரையை செவிமடுக்க...
t.me/al_ilmush_sharee/2112
| AL ILMUSH SHAREE