The Seithikathir®


Kanal geosi va tili: Hindiston, Tamilcha


WELCOME! SUPPORT OUR JOURNALISM!
• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.
WE THANK YOU FOR YOUR TRUST IN US.

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Tamilcha
Statistika
Postlar filtri


ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

சென்னை வானகரத்தில் நடக்கும் நிகழ்வில், விழா மலரை பெற்றுக் கொண்டார் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா.


"பொங்கல் நாளன்று CA தேர்வு"

பொங்கல் திருநாளன்று பட்டய கணக்காளர் தேர்வு நடத்தப்படுவதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்.

தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தேர்வு தேதியை மாற்ற வலியுறுத்தி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் கடிதம்.


வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

அடுத்த 2 நாட்களில் தமிழ்நாடு - இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.


இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.

காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தின் பிரதான குழு அறையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.


*குறள் எண் : ௭௫(75)
*பால் : அறத்துப்பால்
*அதிகாரம் : அன்புடைமை

*குறள் :
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.


*உரை :
இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராகப் பொருந்தி, வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்.

*English :
They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love.

தி ஆ ௨௦௫௫ நளி (கார்த்திகை -௯)
தமிழ் வாழ்க


FINAL: Results of all 81 Jharkhand seats and 288 Maharashtra seats are out. While BJP-led NDA secured a win in Maharashtra, JMM-led I.N.D.I.A. won in Jharkhand.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29


சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்காக பனகல் பார்க் பகுதியில் வரும் 24ம் தேதி முதல் டிச.1ம் தேதி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

🚦 வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக வெங்கடநாராயண சாலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளன. மாறாக. அவர்கள் நேராக தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாகச் சென்று வெங்கடநாராயண சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம்.

🚦 உள்ளூர் மக்களின் வசதிக்காக, வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் வரை இரு திசைகளிலும் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படும்.

- சென்னை போக்குவரத்து காவல்துறை

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29


அவதூறு வீடியோக்கள், பதிவுகளை உடனடியாக நீக்குக. - ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த எச்சரிக்கை நோட்டீஸ்.

இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், ஆஸ்கார் விருது வென்றவருமான ஏர்.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் அவர்களுடைய 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இச்செய்தி ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பிரிவு தொடர்பாகப் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் தந்தை - தாய் பற்றி பரவி வரும் அவதூறுகள் வருத்தம் அளிப்பதாக அவர்களது 21 வயது மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

அதைத்தொடர்ந்து தற்பொழுது தன்னை பற்றி அவதூறு வீடியோக்களை பதிவிடுபவரை சட்டபடி தண்டிக்கப்படுவர் என அதிகார நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தன்னுடைய விவாகரத்து தொடர்பாக உண்மைக்கு புறம்பான, அவதூறான தகவல்களை கொண்ட சமூக ஊடக பதிவுகள், செய்தி கட்டுரைகள், யூடியூப் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார். அப்படி அவதூறு பதிவுகள், வீடியோக்களை நீக்காவிட்டால் சட்டபூர்வமாக வழக்கு தொடரப்படும் என நோட்டீஸில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


என் மீது வைத்த நம்பிக்கையை உறுதிசெய்வேன்: பிரியங்கா காந்தி

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றி, உங்கள் நம்பிக்கையில் நான் மூழ்கிவிட்டேன் என்று வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சுமார் 6 லட்சம் வாக்குகளுடன் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பிரியங்கா காந்தி, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி.

மஹாராஷ்டிராவில் நல்லாட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது; கூட்டணி ஒற்றுமையும், வளர்ச்சியும் வெற்றி பெற்றுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி - பிரதமர் நரேந்திர மோடி.

ஜார்கண்ட் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற ஹேமந்த் சோரன் கூட்டணிக்கு வாழ்த்து.

ஜார்கண்டில் மக்கள் பிரச்சினைக்காக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் - பிரதமர் நரேந்திர மோடி.


வயநாடு தொகுதியில் பிரியங்கா வெற்றி.

வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 6.22 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்றுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 2,11,407 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். பாஜக வேட்பாளர் 1,09,939 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதன் மூலம் 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.


மும்பையில் தமிழர் வெற்றி

மும்பையில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றார் தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன்

சயான் கோலிவாடா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்ச்செல்வன் வெற்றி.


இன்ஸ்டாவில் 5.6 மில்லியன்... வாங்கிய ஓட்டுகளோ 155..!

மகாராஷ்டிரா - வெர்சோவா தொகுதியில் ஆசாத் சமாஜ் (கன்சிராம்) கட்சி சார்பில் போட்டியிட்ட இந்தி பிக் பாஸ் புகழ் அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி

இன்ஸ்டாகிராமில் சுமார் 5.6 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட இவர் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார்.


🚨 Vilasrao Deshmukh Dynasty wiped out by BJP in Maharashtra.

His both sons Dhiraj and Amit defeated by BJP candidates.

🚨 NCP(SP) candidate Rohit Pawar who is grand nephew of Sharad Pawar defeated from Karjat Jamkhed by 300 votes by BJP candidate Ram Shinde.

📌 Maharashtra Congress President Nana Patole wins by slim margin of 500 votes from Sakoli constituency.

📌 All 7 BJP leaders who left party to join NCP(SP) defeated by NDA candidates by comfortable margin.


🚨 BJP & NDA performed 'BETTER' in Bypoll Election 🎯

BJP+ won -

UP 7/9
Assam 5/5
Bihar 4/4
CG 1/1
Gujrat 1/1
MP 1/2
Rajasthan 5/7
Uttarakhand 1/1

• Bjp get 1 extra MP from Nanded Loksabha


218 ரன்களுடன் இந்தியா முன்னிலை.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியாவின் இன்றைய ஆட்டம் நிறைவடைந்தது.

விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்து இந்திய அணி 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


பாஜக கூட்டணி தலைவர்கள் அவசர ஆலோசனை

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின், இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை


வயநாடு மக்களவை தொகுதியில் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் ராகுல்காந்தி 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

தற்போது, இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையிலேயே 3.68 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தங்கை பிரியங்கா முன்னணி.


நவ.25 முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

நவ 25ல் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் நவ.27ல் விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.

இது அடுத்த 2 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

20 ta oxirgi post ko‘rsatilgan.