AL ILMUSH SHAREE


Kanal geosi va tili: Hindiston, Tamilcha
Toifa: Din


இது குர்ஆன், ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்பதற்கான குழுமம்

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Tamilcha
Toifa
Din
Statistika
Postlar filtri




42- லைலத்துல் கத்ர் இரவில் ஒருவர் நின்று வணங்குகிறார்; ஆனால் அது லைலத்துல் கத்ர் இரவு என்பதை அவர் அறியமாட்டார். அவருக்கு லைலத்துல் கத்ர் இரவின் கூலி வழங்கப்படுமா?

43- லைலத்துல் கத்ர் இரவை எப்படித் தேட வேண்டும்?

44- ஏன் லைலத்துல் கத்ர் இரவு மறைக்கப்பட்டிருக்கிறது

https://t.me/ahkaamus_siyaam/38

பாடம் – 20

45- இஃதிகாப் என்றால் என்ன?

46- இஃதிகாப் அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா, இஜ்மா அடிப்படையிலான செயல்

47- இஃதிகாபின் சிறப்புக்கள்

48- இஃதிகாபின் பிரயோசனங்கள்

49- இஃதிகாப் இருப்பதின் சட்டம்

50- இஃதிகாபின் நேரம் பற்றிய சட்டம்

51- இஃதிகாபை ஆரம்பிக்க சிறந்த நேரம் பற்றிய சட்டம்

https://t.me/ahkaamus_siyaam/41

பாடம் – 21

52- இஃதிகாப் இருந்த இடத்திலிருந்து எப்போது வெளியேற வேண்டும் என்பது பற்றிய சட்டம்

53- இஃதிகாபின் மிகக் குறைந்த மற்றும் மிகக் கூடிய நேரம் பற்றிய சட்டம்

54- இஃதிகாப் இருப்பவர் பேணவேண்டிய நிபந்தனைகள் பற்றிய சட்டம்

55- இஃதிகாப் இருப்பவர் நோன்பு நோற்றிருக்க வேண்டுமா என்பது பற்றிய சட்டம்

https://t.me/ahkaamus_siyaam/43

பாடம் – 22

56- இஃதிகாப் பள்ளிவாசல்களில் இருப்பது நிபந்தனையா மற்றும் எந்த பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருக்க முடியும் போன்ற விடயங்கள் பற்றிய சட்டம்.

57- பள்ளிவாசலுடைய வெளிப்பகுதியில் உள்ள பள்ளியோடு இணைந்த முன்றலில் இஃதிகாப் இருப்பது பற்றிய சட்டம்

58- இஃதிகாப் இருப்பவர் அத்தியவசிய தேவைக்காக வெளியே செல்வது பற்றிய சட்டம்

59- இஃதிகாப் இருப்பவர் நோய் விசாரிக்க செல்லல் அல்லது ஜனாஸாவில் கலந்துகொல்வதின் சட்டம்

60- நோய் விசாரிக்க அல்லது ஜனாஸாவில் கலந்து கொள்வேன் என்ற நிபந்தனையுடன் இஃதிகாப் இருப்பதன் சட்டம்

https://t.me/ahkaamus_siyaam/45

பாடம் - 23

61. ஸகாதுல் பித்ரின் சட்டங்கள்

https://t.me/ahkaamus_siyaam/47

பாடம் - 24

62. ஸகாதுல் பித்ரின் சட்டங்கள் Q&A

https://t.me/ahkaamus_siyaam/49


بسم الله الرحمن الرحيم

▪️நோன்பும் அதன் சட்ட திட்டங்களும் - أحكام الصيام ▪️

🎙️அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம் -01

1. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒரு தூண் ஆகும்.

2. நோன்பு நோற்க கடமையாக்கப்பட்டவர்கள்.

https://t.me/ahkaamus_siyaam/5

பாடம் – 02

3. ரமழான், ஷஹ்ரு ரமழான்

4. ரமழான் மாத நோன்பு எப்போது கடமையாக்கப்பட்டது?

5. ரமழான் என்று பெயர் வருவதற்கான காரணம்

6. எங்களுக்கு முன் சென்ற சமுதாயத்திற்கு நோன்பு கடமையாக்கப்பட்டதா?

7. ரமழான் மாத நோன்பின் ஆரம்பம்

https://t.me/ahkaamus_siyaam/7

பாடம் – 03

8. நோன்பு நோற்கும் மற்றும் நோன்பு விடும் நேரம்

https://t.me/ahkaamus_siyaam/9

பாடம் – 04

8. நோன்பு நோற்கும் மற்றும் நோன்பு விடும் நேரம்

https://t.me/ahkaamus_siyaam/11

பாடம் – 05

8. நோன்பு நோற்கும் மற்றும் நோன்பு விடும் நேரம்

https://t.me/ahkaamus_siyaam/12

பாடம் – 06

9. நிய்யத் – நோன்பு நோற்பதற்கு இரவு நேரத்தில் நிய்யத் வைத்தல்

https://t.me/ahkaamus_siyaam/14

பாடம் – 07

9. நிய்யத் – நோன்பு நோற்பதற்கு இரவு நேரத்தில் நிய்யத் வைத்தல்

https://t.me/ahkaamus_siyaam/15

பாடம் – 08

10. சஹர் செய்வதின் சட்டங்கள்

https://t.me/ahkaamus_siyaam/17

பாடம் – 09

11. சஹரின் ஆரம்ப நேரம்

12. நோன்பை பிடித்துக் கொண்டு பற்களுக்கு மத்தியில் தங்கி இருக்கும் உணவை விழுங்குவதின் சட்டம்

13. பகல் காலம் நீலமாகவும் இரவு காலம் குறைவாகவும் மேலும் 6 மாதங்கள் பலாகவும் 6 மாதங்கள் இரவாகவும் உள்ள நாடுகளில் வாழ்பவர்கள் நோன்பு நோற்பதன் சட்டம்

https://t.me/ahkaamus_siyaam/19

பாடம் – 10

14. சஹர் நேரத்தில் எழும்புவதற்காக அலாரம் வைத்தலின் சட்டம்.

15. நோன்பாளி குளிப்பு கடமையான நிலையில் காலைப் பொழுதை அடைதல் பற்றிய சட்டம்.

https://t.me/ahkaamus_siyaam/21

பாடம் – 11

16. நோன்பு நோற்ற நிலையில் உறக்கத்தில் விந்து வெளியேறுதல் பற்றிய சட்டம்

17. நோன்பு நோற்ற நிலையில் வேண்டும் என்று உண்ணுதல் அல்லது பருகுதல் பற்றிய சட்டம்

18. நோன்பு நோற்ற நிலையில் தன்னை அறியாமல் உண்ணுதல் அல்லது பருகுதல் பற்றிய சட்டம்

19. நோன்பு நோற்ற நிலையில் ஒருவர் மறதியினால் உண்ணுதல் அல்லது பருகுதல்; அவருக்கு ஞாபகமூட்டப்பட்ட பின்னர் அவர், மறதியினால் உண்டால் அல்லது பருகினால் நோன்பு பாதில் (செல்லுபடியாகாது) என்று எண்ணி வேண்டும் என்று தொடர்ந்து உண்ணுதல் பற்றிய சட்டம்

https://t.me/ahkaamus_siyaam/51

பாடம் – 12

20. நோன்பாளி அறிமையின் காரணமாக உண்ணுகின்றார், பருகுகின்றார், உடலுறவில் ஈடுபடுகின்றார் இவரின் நோன்பு பற்றிய சட்டம்

21. ஒரு நோன்பாளி வுழூச் செய்யும் போது வாய்க்கும் நாசிக்கும் நீர் செலுத்துகின்றார்; அது தொண்டைக்குழியை அடைந்து வயிற்றுக்குக் செல்வதின் சட்டம்

22. நோன்பு நோற்ற நிலையில் உணவை அல்லது குடிபானத்தை சுவைத்துப் பார்த்தலின் சட்டம்

https://t.me/ahkaamus_siyaam/24

பாடம் – 13

23. நோன்பாளி உமிழ் நீரை, சளியை விழுங்குவதின் சட்டம்

24. நோன்பாளி சிவாக், பல் துலக்குவதின் சட்டம்

https://t.me/ahkaamus_siyaam/26

பாடம் – 14

25. நோன்பாளி புகூர் – நறுமணப் புகை பிடிப்பதின் சட்டம்

26. நோன்பாளி சுருமா உபயோகிப்பதின் சட்டம்

27. நோன்பாளி இஸ்லாத்தைவிட்டும் வெளியேறுவதின் சட்டம்

https://t.me/ahkaamus_siyaam/28

பாடம் – 15

28. நோன்பாளி வாந்தி எடுப்பதின் சட்டம்

29. நோன்பாளி சுய இன்பத்தில் விந்தை வெளியேற்றுவதின் சட்டம்

30. நோன்பாளி மனைவியுடன் உடலுறவு இன்றி ஏனைய செயல்களில் ஈடுபடுதல், அவளை முத்தமிடல், இன்னும் அவளை ஒரு வகையான பார்வை பார்த்தல்; இந்த நிலையில் விந்து அல்லது அல்லது மதி வெளியேறுவதின் சட்டம்

31. நோன்பாளி மறதியாக உண்ணும் போது அவருக்கு அவர் நோன்பாளி என்ற விடயம் ஞாபகமூட்டப்படுவதின் சட்டம்

32. நோன்பாளி குளிப்பதின் சட்டம்

https://t.me/ahkaamus_siyaam/30

பாடம் – 16

33. நோன்பாளியின் வயிற்றிலிருந்து உணவு அல்லது குடி பாணம் தொண்டைக்குழியை அடைந்து மீண்டும் அதை அவர் விழுங்குவதின் சட்டம்

34. நோன்பாளி ஆஸ்துமா நோய்க்காக மருந்துகள் பாவிப்பதின் சட்டம்

35. நோன்பாளி நோய்க்காக பாவிக்கும் மருந்துகளின் சட்டம்

36. நோன்பாளி நோன்பு திறக்கும் போது ஓதும் துஆக்களின் சட்டம்

https://t.me/ahkaamus_siyaam/32

பாடம் – 17

37- லைலத்துல் கத்ர் என்ற பெயர் வரக் காரணம்

38- லைலத்துல் கத்ரின் சிறப்புக்கள்

39- ரமழான் மாதத்தில் எந்த நாள் லைலத்துல் கத்ரின் இரவு

https://t.me/ahkaamus_siyaam/34

பாடம் – 18

40- ரமழான் மாதத்தின் 27ம் நாள் லைலத்துல் கத்ரின் இரவு என்பது சரிதானா?

https://t.me/ahkaamus_siyaam/36

பாடம் – 19

41- லைலத்துல் கத்ர் இரவின் அடையாளங்கள்




بسم الله الرحمن الرحيم

◼️✨🌙✨ மக்களே! பரகத் செய்யப்பட்ட ரமழான் மாதம் வந்து விட்டது. அந்த பரகத்தை பெற்றுக் கொள்ளும் பொருட்டு செய்ய வேண்டிய அமல்களை குறித்து அறிந்து கொள்வோம்! ✨🌙✨◼️

ரமலான் மாதத்தில் செய்ய வேண்டிய சில சிறப்பான அமல்கள்

♦️நோன்பு நோற்பது

♦️கியாமுல் லைல் (இரவுத் தொழுகைகளை) தொழுவது

♦️அல்-குர்ஆன் ஓதுவது

♦️அதிகமாக தர்மம் செய்வது

♦️உம்ரா செய்வது

♦️நோன்பு நோற்ற நிலையில் துஆ செய்வது

♦️இஃதிகாப் இருப்பது

விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிளஹுல்லாஹ்

🎙️ ஆடியோவை செவிமடுக்க...
t.me/al_ilmush_sharee/2223

~•~•~•~•~•~

குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கல்வி கற்று! அமல் செய்து!! மற்றவர்களுக்கும் கல்வியை பகிர்ந்து தீனை நிலைநாட்ட பாடுபடுவோம்!!

t.me/al_ilmush_sharee
🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي






بسم الله الرحمن الرحيم

தஃப்ஸீர் - ஆயதுல் குர்ஸி

விளக்கவுரை: அஷ் ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

🎧முழு உரையை செவிமடுக்க...
t.me/al_ilmush_sharee/2219

📓 PDF வாசிக்க...
t.me/al_ilmush_sharee/2221

எழுத்து: உம்மு ஆயிஷா பின்த் ரஃபி ஹஃபிதஹல்லாஹ்

~•~•~•~•~•~

குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்...
t.me/al_ilmush_sharee
🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي






بسم الله الرحمن الرحيم

தஃப்ஸீர் ஆயதுல் குர்ஸி - தொடர்

இறுதியாக ஆயதுல் குர்ஸியில் அல்லாஹ் தபாரக வ தஆலா கூறுகின்றான்,

وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

அவன் தான் மிக்க உயர்ந்தவன்; அவன் தான் மிக மகத்துவம் மிக்கவன்.

அல் அலீ الْعَلِيُّ என்ற பெயர் மிக்க உயர்ந்தவன் என்ற கருத்தை தரக்கூடியதாகும். அல்லாஹ்வுடைய இந்த உயர்வு என்பது இரண்டு வகையானது

1. அல்லாஹ் தபாரக வ தஆலா தானாகவே அனைத்து படைப்பினங்களுக்கும் மேல் உயர்ந்தவனாக இருக்கிறான். இதுதான் எங்களுடைய அகீதா. அகீதது அஹ்லிஸ் ஸுன்னா வல் ஜமாஅஹ். சூஃபியாக்கள் மற்றும் வழிகேட்டில் உள்ள கூட்டங்கள் கூறுவது போல் அல்லாஹ் எல்லா இடங்களிலும்  இல்லை மாறாக தெட்டத்தெளிவாக வந்திருக்கக் கூடிய ஆயிரத்திற்கும் அதிகமான ஆதாரங்கள், அல்லாஹ் தபாரக வ தஆலா அனைத்து படைப்பினங்களுக்கும் மேலாக ஏழு வானங்களுக்கும் மேலாக தன்னுடைய அர்ஷுக்கு மேல் உயர்ந்துள்ளான் என்பதை தெளிவுபடுத்துகின்றது. இதை நாங்கள் கட்டாயமாக நம்பிக்கை கோட்பாடாக கொள்ள வேண்டும்.

2. இரண்டாவது வகையான உயர்வு என்பது அல்லாஹ் தபாரக வ தஆலா தன்னுடைய பண்புகளில் மிக உயர்ந்தவனாக இருக்கின்றான். அல்லாஹ்வுக்கு ஒப்பாக வேறு யாருக்கும்  அவனுடைய பண்புகளில் போட்டி போட முடியாது.

அல்லாஹ் ஸுபஹானஹூ வ தஆலா கூறுகின்றான்,

وَلَهُ ٱلۡمَثَلُ ٱلۡأَعۡلَىٰ 

நிச்சயமாக உயர்வான பண்புகள் அல்லாஹ்வுக்கே உடையதாகும். 

அல் குர்ஆன் சூரதுர் ரூம் 30: 27

அதேபோல் அல்லாஹ் ஸுபஹானஹூ வ தஆலா கூறுகின்றான்,

لَیۡسَ كَمِثۡلِهِۦ شَیۡءࣱۖ وَهُوَ ٱلسَّمِیعُ ٱلۡبَصِیرُ 

அல்லாஹ்வுக்கு ஒப்பாக எந்தவொரு படைப்பினமும் இருக்க முடியாது. அவன் செவியுறுபவன் உற்றுநோக்குபவன் ஆவான்.

அல் குர்ஆன் சூரா அஷ் ஷூஃரா 42: 11

எனவே அல்லாஹ் தபாரக வ தஆலா தன்னுடைய பண்புகளில் மிகவும் உயர்ந்தவன் ஆவான். ஆனால் படைப்பினங்களை பொறுத்தவரையில் அவை அனைத்தும் குறைவான பண்புகளைக் கொண்டவைகளாகவே இருக்கின்றது. இந்த உலகத்தில் நாம் எவ்வளவுதான் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும்; புத்திசாலிகளாக இருந்தாலும்; செல்வங்களை உடையவர்களாக இருந்தாலும்;  எப்போதும் நாம் அல்லாஹ்வின் பால் தேவை உடையவர்களாக இருக்கின்றோம். அல்லாஹ் நம்மை நிர்வகித்தால் தான் நாம் இந்த உலகில் நிலையாக வாழ முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நிச்சயமாக அல்லாஹ் தபாரக வ தஆலாவை அவனுடைய தகுதிக்கு ஏற்றார் போல் நாம் மகத்துவம் செய்வது நம்முடைய கடமையாக இருக்கிறது. அதனால் தான் அல்லாஹு தஆலா الْعَظِيمُ அல் அழீம் என்ற இந்த பெயரைக் கொண்டு இந்த ஆயதுல் குர்ஸியை இறுதியாக முடித்துள்ளான்.

وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ 

அவன் தான் மிக்க உயர்ந்தவன்; அவன் தான் மிக மகத்துவம் மிக்கவன்.

எனவே, இந்த ஆயதுல் குர்ஸியுடைய மேலான கருத்துக்களை வைத்து பார்த்தால், அல்லாஹ் தபாரக வ தஆலா எதற்காக வேண்டி இந்த ஆயத்தை ஒரு மகத்துவமிக்க மிக சிறப்பான ஆயத்தாக தேர்ந்தெடுத்துள்ளான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். 

அல்லாஹ் தபாரக வ தஆலா நாம் அனைவருக்கும் இந்த குர்ஆனுடைய விளக்கத்தை தர வேண்டும்! நம் அனைவருக்கும் ஈடேற்றத்தை தர வேண்டும்! நம் அனைவரையும் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும்; ஃபித்னாக்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்! நம் அனைவருக்கும் நல்ல புத்தியை தந்து நம்முடைய  சகோதரத்துவத்தை அவன் பாதுகாக்க வேண்டும்! நம் அனைவரையும் நேர்மையாக நடக்க கூடியவர்களாக; மனோ இச்சைகளை தவிர்ந்து இருக்கக் கூடியவர்களாக ஆக்க வேண்டும்! சுய மனோ இச்சைகளைக் கொண்டு தீர்ப்பு வழங்காமல் எங்களுடைய தீனுடைய விஷயங்களில் அல்லாஹ்வின் பால் திரும்பி; ரசூலுல்லாஹ்வுடைய சுன்னாவின் பால் திரும்பி; உலமாக்களுடைய ஆலோசனைகளை கேட்டு; ஒவ்வொரு விஷயத்திலும் நுணுக்கமாக நேர்மையாக நடந்து கொள்ளக் கூடியவராக நம் அனைவரையும் ஆக்க வேண்டும்! மேலும் நம்முடைய இஸ்லாத்தையும், ஈமானையும், நம்முடைய மன்ஹழ்ழையும் பாதுகாக்க வேண்டும்! என்று அல்லாஹ் தபாரக வ தஆலாவிடம் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். 

 والحمد الله رب العالمين

விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

🎧 ஆடியோவை செவிமடுக்க...
https://t.me/al_ilmush_sharee/2216

~•~•~•~•~•~

குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் அறிந்து கொள்ள...
t.me/al_ilmush_sharee
🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي




بسم الله الرحمن الرحيم

தஃப்ஸீர் ஆயதுல் குர்ஸி - தொடர்

அல்லாஹ் தபாரக வ தஆலா ஆயதுல் குர்ஸியில் கூறுகிறான்,

وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا

இந்த வானங்களையும் பூமிகளையும் பாதுகாப்பது ஒரு போதும் அல்லாஹ்வை சிரமப்படுத்தாது.

எனவே நிச்சயமாக அல்லாஹ் தபாரக வ தஆலா எல்லாவற்றையும் செய்யக்கூடியவன். அதற்கு சக்தி வாய்ந்தவன். அனைத்து படைப்பினங்களையும் பாதுகாப்பதற்கு அவைகளை நிர்வகிப்பதற்கு அல்லாஹு  தஆலாவிற்கு எந்தவொரு கஷ்டமும் இருக்காது. அவனை பொறுத்தவரை எல்லா அம்சங்களும் இலகுவான அம்சங்களே ஆகும்.

விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

🎧 தஃப்ஸீர் முழு உரையை செவிமடுக்க...
t.me/al_ilmush_sharee

🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي






بسم الله الرحمن الرحيم

தஃப்ஸீர் ஆயதுல் குர்ஸி - தொடர்

அல்லாஹ் தபாரக வ தஆலா ஆயதுல் குர்ஸியில் கூறுகின்றான்

وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ

நிச்சயமாக அல்லாஹ்வுடைய குர்ஸி வானங்களையும் பூமிகளையும் சுற்றி விசாலமாக இருக்கின்றது

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அவர்களுடைய தஃப்ஸீரில் இந்த குர்ஸி என்றால் என்ன என்று தெளிவுபடுத்தினார்கள்,

الكُرسيُّ موضِعُ القَدَمينِ، والعرشُ لا يَقدِرُ أحَدٌ قَدْرَه إلا الله

அல் குர்ஸி என்பது அல்லாஹ்வுடைய இரண்டு பாதங்களுடைய இடம்

இந்த குர்ஸியை பொறுத்த வரையில் இது ஏழு வானங்களையும் ஏழு பூமிகளையும் சுற்றி விசாலமாக இருக்கக்கூடியதாகும். அதேபோல் இந்த குர்ஸியை விட மிக பெரியதாக இருக்கக்கூடியது தான் அல்லாஹ்வுடைய அர்ஷ். அதனால்தான் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள், அர்ஷை பொறுத்தவரையில் அல்லாஹ்வைத் தவிர அதனை யாராலும் எவ்வளவு பெரியது என்று கணக்கிட முடியாது என்று கூறினார்கள்.

முஸ்ததரகுல் ஹாகிமில் ஹாகிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இதை பதிவு செய்துள்ளார்கள், இமாம் அல் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இதை ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள்.

விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

🎧 ஆடியோவை செவிமடுக்க..
https://t.me/al_ilmush_sharee/2211

~•~•~•~•~•~

குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்...
t.me/al_ilmush_sharee
🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي






بسم الله الرحمن الرحيم

I هذه دعوتنا وعقيدتنا
இதுவே எங்கள் தஃவா!
இதுவே எங்கள் அகீதா!!


14/37

அல் இமாம் அல் முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

لا نرى الخروج على حكام المسلمين مهما كانوا مسلمين, ولا نرى الانقلابات سبباً للإصلاح, بل لإفساد المجتمع. أما حكام عدن فنرى قتالهم واجباً حتى يتوبوا من الإلحاد ومن الاشتراكية ومن دعوة الناس إلى عبادة (لِيْنِين ومارِكْس) وغيرهما من زعماء الكفر. [قال الشيخ في الحاشية: وقد أخذهم الله أخذ عزيز مقتدر, أما الآن فالحكومة مسلمة]

முஸ்லிம் ஆட்சியாளர்கள் முஸ்லிம்களாக இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக வெளியேறி (போராட்டம் அல்லது கிளர்ச்சி) செல்வது சரியானது என நாங்கள் கருத மாட்டோம். அதேபோன்று ஆட்சி கவிழ்ப்புகளை ஏற்படுத்துவது சீர்திருத்தக் கூடிய காரணமாகும் என  நாங்கள் கருத மாட்டோம். மாறாக அது சமூகத்தை சீர்கெடுத்து விடும். (யமனில் உள்ள) அதன் பகுதியை சேர்ந்த ஆட்சியாளர்கள் நாத்திகம் மற்றும் சமூகவுடைமை கொள்கைகளையும் லெனின், மார்க்ஸ் போன்ற குஃப்ரில் இருக்கும் தலைவர்களையும் வணங்குவதற்காக மக்களை அழைக்கின்ற இத்தகைய காரியங்களிலிருந்து தவ்பா செய்யும் வரை அவர்களுக்கு  எதிராக போர் செய்வது கடமை என்று நாங்கள் கருதுகிறோம். [அஷ் ஷெய்க் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அடிக்குறிப்பில் கூறுகிறார்கள், மிகைத்த வலிமைமிக்க ஒருவன் பிடிப்பதை போன்று அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான் (தண்டிக்கும் விதமாக அவர்களை தோற்கடித்து  ஆட்சியை அகற்றினான்) தற்போது அது இஸ்லாமிய ஆட்சியாக மாறிவிட்டது ]

விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

🎧 ஆடியோவை செவிமடுக்க...
https://t.me/al_ilmush_sharee/2208
கால அளவு: 131 நிமிடங்கள்

[ஸலஃபி போர்வையில் ஒளிந்து இருக்கும் முமையிஃ மற்றும் கவாரிஜ்களை பார்த்து ஏமாந்து போய் விட வேண்டாம். குர்ஆன் சுன்னாவை ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் விளக்கத்தில் அடிப்படையில் கற்றுக்கொள்ள அதற்குரிய உண்மையான உலமாக்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.]

#هذه_دعوتنا_وعقيدتنا

~•~•~•~•~•~

குர்ஆன் ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் அறிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள்...

t.me/al_ilmush_sharee
🔘 AL ILMUSH SHAREE | العلم الشرعي



20 ta oxirgi post ko‘rsatilgan.