AL ILMUSH SHAREE


Channel's geo and language: India, Tamil
Category: Religion


இது குர்ஆன், ஸுன்னாவை ஸலஃப் மன்ஹஜ் அடிப்படையில் கற்பதற்கான குழுமம்

Related channels  |  Similar channels

Channel's geo and language
India, Tamil
Category
Religion
Statistics
Posts filter








தலைப்பு: أليس الله بكافة عبده

"தன் அடியாருக்கு அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனாக இல்லையா?"


~•~•~•~•~

அல்லாஹ் ஸுபஹானஹூ வ தஆலா கூறுகின்றான்,

اَلَيْسَ اللّٰهُ بِكَافٍ عَبْدَهٗ‌ وَيُخَوِّفُوْنَكَ بِالَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ‌ ‏

தன் அடியாருக்கு அல்லாஹ் (ஒருவனே சகலவற்றிற்கும்) போதுமானவனாக இல்லையா? இன்னும், அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவற்றைக் கொண்டு உம்மை பயமுறுத்துகின்றனர்; இன்னும், எவரை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ அவரை, நேர் வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.

(அல்குர்ஆன்: சூரா அஸ் ஸுமர்: 39:36)

~•~•~•~•~

விளக்கவுரை: அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

🎧உரையை செவிமடுக்க...
t.me/al_ilmush_sharee/2092

| AL ILMUSH SHAREE




அஷ் ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ் அவர்களின் இன்றைய முஹாதராவிலிருந்து, (சிறு குறிப்புகள்)

ஒரு முஸ்லிம் காரணம் இல்லாமல் சபிப்பவனாக இருக்கக் கூடாது.

* மேலான நல்லடியார்களின் படித்தரங்கள் நான்கு: நபிமார்கள்/ ஸத்தீகீன்/ ஷுஹதா/ஸாலிஹீன். இவர்கள் அனைவரும் காரணம் இல்லாமல் சபிப்பவர்களாக இருக்க மாட்டார்கள்.
* ஒரு முஸ்லிம் பாவம் செய்த போதிலும் அவனை சபிக்க கூடாது.
* மேற்கூறப்பட்ட நல்லடியார்களை சவிப்பவர்கள் ஈரான் ஷிஆ ராஃபிதா‌க்கள். இவர்கள் முஸ்லிம்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்.
* பிள்ளைகளை சபிக்க கூடாது.
* பெற்றோர்களை சபிப்பது பெரும் பாவமாகும்.
* வாகனங்களை சபிக்க கூடாது
* நம்மை சுற்றியுள்ள விலங்குகளை சபிக்க கூடாது
* காபிர்களை பொதுவாகவும் குறிப்பாகவும் சபிக்கலாம்
* அல்லாஹ்வும் ரசூலும் சபித்த நபர்களையும் கூட்டங்களையும் நாமும் சபிக்கலாம்.
* அல்லாஹ் உன்னை சபிப்பானாக என்பதுடைய அர்த்தம் அல்லாஹ் அவனுடைய ரஹ்மத்தில் இருந்து உன்னை தூரமாக்கட்டும் என்று பொருளாகும்.

https://t.me/al_ilmush_sharee
| AL ILMUSH SHAREE




யமன் தேசத்தை பற்றிய நபி ﷺ அவர்களின் முன்னறிவிப்பும் தற்போது அங்கு நடைபெற்று வரும் உறுதியான ஸலஃபி தஃவாவும்.

உரையை செவிமடுக்க
https://t.me/NawwasalHindiTamil/793
https://t.me/NawwasalHindiTamil/804



அல்-இமாம் அல்-முஜத்தித் அல்-முஹத்திஸ் அல்-ஃபகீஹ் அபூ அப்திர் ரஹ்மான் முக்பில் இப்னு ஹாதீ அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கட்டமைத்த யமன் தேசத்தை மையமாக வைத்து நடைபெற்று வரும் ஸலஃபி தஃவாவிற்கு ஷெய்க் அவர்களால் கலிஃபாவாக நியமிக்கப்பட்ட அல்-அல்லாமா அல்-முஹத்திஸ் அல்-ஃபகீஹ் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா இப்னு அலீ அல் ஹஜூரி ஹஃபிதஹுல்லாஹ் அவர்களின் தஃவாவோடு தொடர்புடைய உலமாக்கள் மட்டும் மாணவர்களால் இயக்கப்படும் சில சமூகவலைத்தளங்கள்:

(அரபி العربية)
https://t.me/sh_yahia
https://t.me/sh_yahia_duroos
https://t.me/A_lzoukory
https://t.me/Bashuaib
https://t.me/youssefalgazairi
https://t.me/abuamroalhgoury
https://t.me/AbulYamman
https://t.me/AliAlHajjaji
https://t.me/salmansalehalemad
https://t.me/aburawaha_alsharihi
https://t.me/abuamroalhgoury
https://t.me/aboammaar
https://t.me/abubilalhami
https://t.me/NawwasalHindiArabic
https://t.me/DuroosNawwasalHindiArabic
https://t.me/rshad11
https://t.me/aburawaha_alsharihi
https://t.me/ALTAMSOKPLSNa
https://t.me/ktooop
https://t.me/alawe1434
https://t.me/daralhadeethalhami
https://t.me/al7ami
https://t.me/alashab211
https://t.me/aleinsv
https://t.me/abukhlid3320

(English)
https://t.me/ShaykhYahyaEn
https://t.me/abdulhamid12
https://t.me/bashuaiben
https://t.me/Abulyammaneng
https://t.me/abuamralhajoori
https://t.me/abubilaalalhadhramy
https://t.me/nawwasalhindi
https://t.me/NawwasalHindiEng
https://t.me/NawwasalhindiEngduroos
https://t.me/AbuHaatimEn
https://t.me/jumanlahmareng
https://t.me/ShaykhWahbEN
https://t.me/madrasatuna
https://t.me/salafirecords
https://t.me/mufradaatun
https://t.me/kalimaaaat
https://t.me/masjidmuqbilarabic
https://t.me/almanhajussalafi
https://t.me/mirathalanbiyaa
https://t.me/MasjidAlImaamMuqbil
https://t.me/istiqamamasjid
https://t.me/MarkazUthman
https://t.me/AwfIbnMaalikIsaamicLibrary
https://t.me/maktabahalawzaai
https://t.me/SalafiMakthaba
https://t.me/qandabenefits
https://t.me/coreIslamiccourse
https://t.me/ummhasnablogspot
https://t.me/alwadeia
https://t.me/salafidawahyemen
https://t.me/AlHajoori
https://t.me/AtharofPiousPredecessors
https://t.me/darulikhlaas
https://t.me/AlQawlulMufeed
https://t.me/ahlulhadithwalathar
https://t.me/brothershomeschooling
https://t.me/womensbenefits
https://torontodawah.com/
http://www.qandabenefits.com/
https://darulikhlaas.com/
https://darussaafi.com/
http://ahsanqawl.com/
https://musamills.wordpress.com/
http://nawwasalhindi.com/
https://aloloom.wordpress.com/
http://www.masjidalimammuqbil.co.uk/
https://www.istiqamamasjid.com/
http://understand-islam.net/site/

(தமிழ்)
https://t.me/NawwasalHindiTamil
https://nawwasalhindi.com/
https://t.me/al_ilmush_sharee

| AL ILMUSH SHAREE




எனவே, JAQH ஸலஃபி மன்ஹஜில் மட்டுமில்லை தவ்ஹீதிலும் பலகீனமானவர்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும்.

இதைத்தான் நபி ﷺ அவர்கள் முன்னறிவிப்பு செய்தார்கள்,

٢ - إنَّ اللَّهَ لا يَقْبِضُ العِلْمَ انْتِزاعًا يَنْتَزِعُهُ مِنَ النّاسِ، ولَكِنْ يَقْبِضُ العِلْمَ بقَبْضِ العُلَماءِ، حتّى إذا لَمْ يَتْرُكْ عالِمًا، اتَّخَذَ النّاسُ رُؤُوسًا جُهّالًا، فَسُئِلُوا فأفْتَوْا بغيرِ عِلْمٍ، فَضَلُّوا وأَضَلُّوا.
الراوي: عبدالله بن عمرو • مسلم، صحيح مسلم (٢٦٧٣) • [صحيح] •

அல்லாஹ், மக்களி(ன் மனங்களி)லிருந்து கல்வியை ஒரேயடியாகப் பறித்துக்கொள்ள மாட்டான். மாறாக, உலமாக்களை கைப்பற்றிக் கொள்வதன் மூலம் கல்வியைக் கைப்பற்றுகிறான். இறுதியில் ஒரு ஆலிம் கூட அவன் விட்டுவைக்காதபோது, மக்கள் அறிவீனர்களையே தலைவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். அவர்களிடம் கேள்வி கேட்கப்படும். அறிவில்லாமலேயே அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச் செய்வார்கள்.

நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2673

இதனால் தான் ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் வழிகேடர்களுடன் உட்காருவதை எச்சரிக்கை செய்துள்ளார்கள்:

◼️இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்,

لا تجالس أهل الأهواء فإن مجالستهم ممرضة للقلب

மனோ இச்சையை பின்பற்றக் கூடியவர்களின் சபைகளில் உட்காராதீர்கள்; நிச்சயமாக அத்தகைய சபைகளில் உட்காருவது உள்ளத்தில் நோயை ஏற்படுத்தும்.

நூல்: அல் இபானா

◼️இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்,

وقال إسحاق بن إبراهيم: سمعته يقول: أخزى الله الكرابيسي، لا يجالس ولا يكلم، ولا تكتب كتبه، ولا تجالس من يجالسه.

கராபிஸி -க்கு அல்லாஹ் அவமானத்தை ஏற்படுத்தும்; அவருடன் யாரும் உட்காரக் கூடாது அவருடன் யாரும் பேசக்கூடாது; அவருடைய புத்தகங்கள் எழுதப்படக்கூடாது; அவருடன் யார் உட்காருகிறாரோ அவருடனும் உட்கார கூடாது.

(கராபிஸி என்பவன் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற வழிகேட்ட ஜஹ்மிய்யா கொள்கையில் இருந்தவன் ஆவான்)

நூல்:
ص192 - كتاب بحر الدم فيمن تكلم فيه الإمام أحمد بمدح أو ذم

◼️அப்துல் வஹ்ஹாப் இப்னுல் கஃப்ஃபாஃப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்,

عبدالوهاب بن الخفاف قال: "مررت بعمرو بن عبيد وحده، فقلت: مالك؟ تركوك؟ قال: نهى الناس عني ابن عون فانتهوا"

நான் அம்ர் இப்னு உபைத் -ஐ ஒருமுறை கடந்து சென்றேன்; அவன் தனியாக சென்று கொண்டிருந்தான்; அப்போது அவனைப் பார்த்து என்ன ஆனது உனக்கு, மக்கள் உன்னுடன் இருப்பதை விட்டு விட்டார்களா? என்று கேட்டேன். அதற்கு அவன், இப்னு அவ்ன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் என்னுடன் உட்காரக் கூடாது என்று மக்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள் அதனால் மக்கள் என்னுடன் இருப்பதை விட்டு விட்டார்கள் என்று கூறினான்.

நூல்: ميزان الاعتدال 5/330

(அம்ர் இப்னு உபைத் என்பவன் வழிகெட்ட முஃதஜிலா கொள்கையில் முக்கியமான அழைப்பாளனாக இருந்தவன்)

◼️ அல் பகவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்,

قد مَضَتِ الصَّحابةُ والتابِعونَ وأتباعُهم وعُلماءُ السُّنَّة على هذا مُجْمِعِين مُتَّفِقِين، على مُعاداةِ أهلِ البِدَعِ، ومُهاجَرَتِهم

ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களை பின்பற்றிய நல்லடியார்கள் மற்றும் அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்கள் ஆகிய அனைவரும், அஹ்லுல் பித்ஆவை விரோதம் கொள்ள வேண்டும்; மேலும் அவர்களுடன் சேராமல் அவர்களை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தில் இருந்துள்ளார்கள்.

நூல்: شرح السنة للبغوي 1/227

எனவே, வழிகேடர்களுடைய சபையில் உட்காருவதும் அவர்களுடைய உபதேசங்களை கேட்பதும் ஸலஃபி மன்ஹஜுக்கு முரணான ஒரு விஷயமாகும். முஸ்லிம் உம்மத்தும் குறிப்பாக இளைஞர்களும்; மார்க்கத்தில் உறுதி இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் இத்தகைய இயக்கவாதிகளை விட்டு விலகிக் கொள்ள வேண்டும்; ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் விளக்கத்தில் பால் மார்க்கத்தை பின்பற்றி அதில் உறுதியாக இருக்கும் உலமாக்களோடு தொடர்பில் இருந்து கொள்ள வேண்டும். இது தான் இம்மை மறுமையின் வெற்றிக்கு வழி வகுக்கும். இன் ஷா அல்லாஹ்.

அபூ ஆயிஷா அப்துல்லாஹ் இப்னு சமீர் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

t.me/al_ilmush_sharee
| AL ILMUSH SHAREE


بسم الله الرحمن الرحيم

JAQH அமைப்பின் இளைஞர்கள் மாநாடு இளைஞர்களை நேர்வழிப்படுத்தாது மாறாக வழி கெடுத்து விடும். இளைஞர்களுக்கு உபதேசம் சொல்வதற்காக JAQH அழைத்த நபரை பாருங்கள்!!

தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக இந்துக்களின் கோவில்களுக்கு சென்று கோவில் பூசாரிகள் நெருப்பைக் கொண்டு ஆர்த்தி எடுக்கும் பொழுது அதற்கு கும்பிடு போட்டு; நெற்றியில் விபூதியை வைத்த பொழுது அதையும் ஏற்றுக்கொண்டு; பொதுமக்கள் பார்க்கக்கூடிய நிலையில் அன்னியப் பெண்களுடன் ஒட்டி உரசிக் கொண்டு தெருத்தெருவாக வாகனத்தில் பயணித்த; தன்னுடைய உடம்பில் திமுக ரத்தம் ஓடுகிறது என்று பேசுவதை பெருமையாக ஏற்றுக்கொண்ட வழிகெட்ட அரசியல்வாதி தான் தமுமுக மமக பொதுச் செயலாளர் அப்துல் ஸமது.

முஸ்லிம் சமூகத்திற்கு உபதேசம் சொல்லக்கூடிய தகுதி இவருக்கு இருக்கு என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?

~

"முஸ்லிம்கள் பொங்கல் விழா கொண்டாட வேண்டும்" என்று கூறிய CMN சலீம் - ஐ இளைஞர்களுக்கு உபதேசம் செய்ய அழைத்துள்ளது JAQH.

சமகாலத்தில் முஸ்லிம் உம்மத்தை மிகப் பெரிய அளவில் வழிகெடுத்த யூசுஃப் அல் கர்ளாவி என்ற இஃக்வானிய வழிகேடரை ஆன்மீக அறிவாசான் என்றும்; அவர் பேசிய தத்துவங்கள் தனக்கு கொள்கையாக இருக்கின்றது என்று பேசியவர் தான் CMN சலீம்.

இத்தகைய வழிகேட்ட இஃக்வானிய சிந்தனையை உள்வாங்கியதால் இந்துக்களுடைய பொங்கல் விழாவை முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும் என்று பேசியவர் தான் இந்த CMN சலீம்.

மேலும் இந்துக்களுடைய கோவில்களை கழுவி விடுவதை பெருமையாக நினைக்கும் SDPI கட்சியின் விருது வழங்கும் விழாவில் ஒரு காஃபிர் தலைவரின் பெயரில் வழங்கப்பட்ட விருதை சந்தோஷமாக வாங்கிக் கொண்டவர் தான் இந்த CMN சலீம்.

காஃபிர்களின் கலாச்சாரத்தை பின்பற்றக் கூறும் இத்தகைய வழிகேடர்கள் இளைஞர்களுக்கு உபதேசம் கூற தகுதி உடையவர்களா?

ஒரு பக்கம் இஃக்வானுல் முஸ்லிமீன் அமைப்பு வழிகேடு என்று மேலோட்டமாக பேசுவிட்டு மறுபக்கம் அந்த வழிகெட்ட கொள்கையை உள்வாங்கியவர்களையே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கிறது JAQH. இது ஸலஃபி மன்ஹஜ் அல்ல மாறாக இது தான் இஃக்வானிய மன்ஹ்ஜ் ஆகும்.

~~

بسم الله الرحمن الرحيم

இளைஞர்களை வழிகெடுக்கும் JAQH இளைஞர்கள் மாநாடு

திமுக கட்சிக்கு ஓட்டு போடுவது இஸ்லாத்துடைய ஆறாவது தூண் என்றும்; முஸ்லிம்களுடைய உள்ளத்தில் அல்லாஹ் ரசூலுக்கு அடுத்ததாக ஸ்டாலின் இருக்கிறார் என்று மடத்தனமாக பேசியவர் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் IUML கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன்.

இத்தகைய வழிகேடரை JAQH தனது மாநாட்டிற்கு அழைத்ததன் வெளிப்பாடு, IUML கட்சியின் தேசிய தலைவராகிய அவர் JAQH இளைஞர்கள் மாநாட்டில் கூறுகிறார்:

"இஸ்லாமிய மார்க்கம் என்பது எதற்கும் எதிரான மார்க்கம் அல்ல மாறாக எல்லா மதங்களையும் ஒப்புக்கொண்டு; ஏற்றுக்கொண்டு; உரிய மரியாதையை தரக்கூடிய மார்க்கம் தான் இஸ்லாமிய மார்க்கம்."

"ISLAM IS NOT A RELIGION THAT CONFRONTS OTHER RELIGION; ISLAM IS THE RELIGION THAT CONFIRMS ALL THE RELIGIONS."

தமிழிலும் ஆங்கிலத்திலும் இவ்வாறு கூறிவிட்டு இது ஒரு முக்கியமான கொள்கையாகும் என்று அவர் கூறுகிறார்.

இதற்கு JAQH நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜஸாகல்லாஹு கைர் என்று கூறுகிறார்.

சகோதரர்களே! இது மார்க்கத்துடைய அடிப்படை 'லா இலாஹ இல்லல்லாஹ்"' என்ற கலிமாவையே தகர்க்க கூடிய மிக மோசமான வார்த்தைகள் இல்லையா?

அல்லாஹ் ஸுபஹானஹு வதஆலா கூறுகிறான்:

فَمَنْ يَّكْفُرْ بِالطَّاغُوْتِ وَيُؤْمِنْ بِاللّٰهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى لَا انْفِصَامَ لَهَا‌‌ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏
எவர் தாகூத்தை நிராகரித்து விட்டு அல்லாஹ்வை ஈமான் கொள்கிறாரோ அவர் திட்டமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். மேலும் அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
(அல்குர்ஆன் : 2:256)

وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏
“இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவராவது தேடினால், அப்பொழுது அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படவே மாட்டாது. மேலும், மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார்”
(அல்குர்ஆன் : 3:85)

هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ‏
அவன் எத்தகையோனென்றால், அவன் தன்னுடைய தூதரை நேர் வழியைக் கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான், இணைவைத்துக்கொண்டிருப்போர் வெறுத்த போதிலும், மற்ற ஏனைய எல்லா மார்க்கங்களைவிட அதை மேலோங்கச் செய்யவே (தன் தூதரை அனுப்பி வைத்தான்.)
(அல்குர்ஆன் : 61:9)

இவ்வாறாக அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு நேர் முரணான காஃபிர்களை திருப்திபடுத்தக்கூடிய முர்ஜியா சிந்தனை தவ்ஹீத்வாதிகள் என்று கூறிக் கொள்பவர்களின் மேடையில் பேசப்படுகிறது.






இருந்த போதிலும் சஊதி ஆட்சியாளர்களிடத்தில் தவறே இல்லை; அவர்கள் தவறு செய்யவே மாட்டார்கள் என்று அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் அகீதாவை சார்ந்த ஸலஃபிகள் யாரும் கூறுவதில்லை. மாறாக அவர்களிடத்திலும் தவறுகள் இருக்கின்றன.

மார்க்கத்திற்கு முரணான பாவமான விஷயங்களில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஈடுபடும் பொழுது அதை ஆதரிக்கக் கூடாது; அதை வெறுக்க வேண்டும்; யாருக்கு சக்தி இருக்கின்றதோ அவர்கள் ஆட்சியாளர்களிடத்தில் உபதேசம் செய்ய வேண்டும்; ஆனால் பாவங்களில் ஈடுபடுகின்றார்கள் என்ற காரணத்தால் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதோ அல்லது கிளர்ச்சி செய்யும் விதத்தில் பரப்புரை செய்வதோ கூடாது. இவ்வாறு குழப்பங்கள் செய்வதை நபி ﷺ அவர்கள் தடுத்துள்ளார்கள்.

அதாவது முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் நலவை நாடக்கூடிய விதத்தில் நடந்து கொள்ள வேண்டுமே தவிர குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது.

ஆட்சியாளர்கள் சம்பந்தமாக அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத் / மன்ஹஜுஸ் ஸலஃப் -ன் அகீதா ஆதாரங்களுடன் (தொடர்..)

01) https://t.me/al_ilmush_sharee/1488
02) https://t.me/al_ilmush_sharee/1538
03) https://t.me/al_ilmush_sharee/1541
04) https://t.me/al_ilmush_sharee/1544
05) https://t.me/al_ilmush_sharee/1547
06) https://t.me/al_ilmush_sharee/1550
07) https://t.me/al_ilmush_sharee/1605
08) https://t.me/al_ilmush_sharee/1610
09) https://t.me/al_ilmush_sharee/1623
10) https://t.me/al_ilmush_sharee/1626
11) https://t.me/al_ilmush_sharee/1629
12) https://t.me/al_ilmush_sharee/1638
13) https://t.me/al_ilmush_sharee/1640
14) https://t.me/al_ilmush_sharee/1649
15) https://t.me/al_ilmush_sharee/1652
16) https://t.me/al_ilmush_sharee/1664
17) https://t.me/al_ilmush_sharee/1841
18) https://t.me/al_ilmush_sharee/1861
19) https://t.me/al_ilmush_sharee/1949
20) https://t.me/al_ilmush_sharee/1410
(இன் ஷா அல்லாஹ், தொடரும்...)

| AL ILMUSH SHAREE


بسم الله الرحمن الرحيم

முஸ்லிம் உம்மத்திற்கு சஊதி அரேபியா எந்த நலவையும் செய்ததில்லை என்று கூறி முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்த்தி செய்யும் விதமாக வெறுப்பை பரப்பி குழப்பங்கள் ஏற்படுத்தி வரும் பொய்யர்களுக்கு மறுப்பு!

◾ குர்ஆன் ஹதீஸை ஸஹாபாக்கள் விளக்கத்தின் அடிப்படையில் பின்பற்றுகின்ற மன்ஹஜுஸ் ஸலஃப் -ல் உறுதியான மூத்த உலமாக்கள் இருக்கக்கூடிய நாடு சஊதி அரேபியா.

◾ தவ்ஹீதும், ஸஹீஹான அகீதாவும், மார்க்கத்தின் ஏனைய விஷயங்களும், தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் புத்தகங்களாக தொகுக்கப்பட்டு; பெரிய அளவில் அச்சிடப்பட்டு; உலகம் முழுவதும் பரப்பப்பட்டு வருகின்றது; மேலும் பொது மக்களுக்கு பாடங்களாகவும் நடத்தப்பட்டு வருகின்றது. இதற்காக வேண்டி சஊதி அரேபியா அரசாங்கம் பாரிய ஒத்துழைப்பை உலமாக்களுக்கு செய்து வருகின்றது.

◾மக்களின் பிரச்சினைகளுக்கான ஃபத்வாக்களை சஊதி அரேபியாவை சார்ந்த உலமாக்கள் ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கி வருகிறார்கள் மேலும் ஆட்சியாளர்களுக்கும் உபதேசம் செய்து வருகிறார்கள். மேலும் எல்லா வழிகெட்ட கூட்டங்களுக்கும் மறுப்பு கொடுத்து மக்களுக்கு உண்மையான இஸ்லாத்தை தெளிவுபடுத்தி வருகிறார்கள்.

◾ மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுந் நபவி ஆகிய இரண்டு புனித பள்ளிவாசல்களிலும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சிரமமின்றி இபாதத் செய்வதற்காக பல்வேறு வசதிகளை சஊதி அரேபியா அரசாங்கம் அல்லாஹ்வின் உதவியால் செய்து அதை பராமரித்து பாதுகாத்தும் வருகின்றது.

◾இஸ்லாத்துடைய ஐந்தாவது தூணாக இருக்கின்ற முக்கியமான அமலான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக ஒன்று கூடக்கூடிய சுமார் 20 முதல் 30 லட்சம் மக்களுக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகளை சஊதி அரேபியா அரசாங்கம் செய்து வருகின்றது. இதன் மூலம் கூட்ட நெரிசலில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போவது தடுக்கப்பட்டுள்ளது.

◾மதினாவில் உள்ள மன்னர் ஃபஹத் வளாகத்திலன் மூலமாக சஊதி அரேபியா வருடத்திற்கு 20 மில்லியன் அல்குர்ஆன் பிரதிகளை வெளியிட்டு வருகின்றது. இதன் மூலம் அல் குர்ஆன் 76 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சிடப்படுகின்றது. இதுவரை அல்குர்ஆன் சம்பந்தப்பட்ட 345 மில்லியன் பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

◾ சிரியா, யமன், ஃபலஸ்தீன், லிபியா, சூடான் என முஸ்லிம் நாடுகளிலேயே முஸ்லிம்களுடைய ரத்தங்கள் ஓட்டப்படக்கூடிய சூழலில் சஊதி அரேபியாவில் வசிக்கக்கூடிய சுமார் 3.7 கோடி மக்களும், உம்ரா செய்வதற்காக தினந்தோறும் வருகை தரும் லட்சக்கணக்கான முஸ்லிம்களும் அல்லாஹ்வின் உதவியால் எதிரிகளின் அச்சமில்லாமல் நிம்மதியாக வாழ்கின்றனர்.

◾தங்களுடைய சொந்த நாடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட யமன் 5,61,911மக்கள், சிரியா 2,62,573 மக்கள், மியான்மர் 2,69,442 மக்கள் போன்ற லட்சக்கணக்கான மக்களுக்கு சஊதி அரேபியா தன்னுடைய நாட்டில் வாழ்விடங்களை அமைத்து தருகின்றது. மேலும் அவர்களுக்கு இலவச கல்வியும் இலவச மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறது.

◾போர், வறுமை, நோய்கள், பேரிடர்கள் போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான மற்றும் நிவாரண உதவியாக சஊதி அரேபியா 130 பில்லியன் டாலர் வழங்கியுள்ளது. இதனால் 170 நாடுகளை சேர்ந்த மக்கள் பயனுடைந்துள்ளனர்.

◾கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்யும் விதமாக சஊதி அரேபியா 824.29 மில்லியன் டாலர் தொகையை வழங்கியுள்ளது. இதன் மூலம் 50 நாடுகள் பயனடைந்துள்ளன.

◾துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக சஊதி அரேபியா 362 மில்லியன் ரியால் தொகையை வழங்கியுள்ளது. இதற்காக துருக்கி அரசாங்கமும் சவுதி அரேபியா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

◾தற்போது சூடானில் நடைபெற்ற வெறும் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவும் விதமாக சஊதி அரேபியா 120 மில்லியன் டாலர் தொகையை வழங்கியுள்ளது.

◾ஃபலஸ்தீன் கஸ்ஸாவில் யூத காஃபிர்களால் மோசமான அழிச்சாட்டியங்கள் நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்க கூடிய சூழலில் சஊதி அரேபியா‌ இதுவரை 500 மில்லியன் ரியால் மதிப்பிலான உதவிகளை செய்துள்ளது. கஸ்ஸா முஸ்லிம்களுக்கு உதவிகள் சென்று சேர்வதை தடுக்கும் விதமாக அக்கிரமக்கார யூதர்கள் ஏற்படுத்தியுள்ள தடைகளையும் தாண்டி சஊதி அரேபியா இந்த உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் கஸ்ஸாவுடைய மக்கள் மனமார்ந்த தங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

(மேற்கண்ட செய்திகள் அனைத்தும் www.spa.gov.sa, www.saudigazette.com.sa, www.unrwa.org போன்ற அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்ட வெளிப்படையான செய்திகளாகும்)

الحمدلله لا حول ولا قوة إلا بالله

இவ்வாறாக முஸ்லிம் உம்மத்திற்கு அதிகமான நலவை சஊதி அரேபியா செய்தி வருகின்றது.


﷽ மார்க்க கல்வி கற்கக்கூடிய மாணவர்கள் அனைவருடைய நோக்கமும் தான் ஆலிமாக வேண்டும் என்பதில்லை மாறாக தன்னிடம் இருக்கும் அறியாமையை போக்கிக் கொள்ளும் பொருட்டு சரியான அகீதாவை கற்றுக்கொண்டு; அல்லாஹ்விற்கு சரியான முறையில் இபாதத்துகள் செய்து; சந்தேகங்களிலிருந்தும், மனோ இச்சைகளிலிருந்தும் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டி முதலாவதாக மார்க்க கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும். இது சம்பந்தமான அஷ் ஷெய்க் ஸாலிஹ் ஆலு ஷெய்க் ஹஃபிதஹுல்லாஹ் அவர்களின் உபதேசம்.


Forward from: SᴀʟᴀғɪRᴇᴄᴏʀᴅs | التسجيلات السلفية
Video is unavailable for watching
Show in Telegram
Becoming a scholar is not the ultimate objective | Sheikh Salih Aal Ash-Sheikh ḥafidhahullāh


Video is unavailable for watching
Show in Telegram




ஓதுதல்: அஷ் ஷெய்க் அபுல் யமான் அத்னான் அல் மஸ்கரி ஹஃபிதஹுல்லாஹ்.

வசனங்கள்: அல் குர்ஆன் சூரா ஆலி இம்ரான் 3: 193, 194

ஷெய்க் அவர்களின் ஃபத்வாக்களை வாசிக்க...
(English)
https://t.me/Abulyammaneng
(Iالعربية)
https://t.me/AbulYamman
(Swahili)
https://t.me/sautizaahlisunnahtanzania
(Indonesian)
https://t.me/syaikhadnanindonesia
(French)
https://t.me/AdnanalmasqriFr
(Website)
https://sh-adnan.net/lessons/

| AL ILMUSH SHAREE



19 last posts shown.