எனவே, JAQH ஸலஃபி மன்ஹஜில் மட்டுமில்லை தவ்ஹீதிலும் பலகீனமானவர்கள் இவர்களை புறக்கணிக்க வேண்டும்.
இதைத்தான் நபி ﷺ அவர்கள் முன்னறிவிப்பு செய்தார்கள்,
٢ - إنَّ اللَّهَ لا يَقْبِضُ العِلْمَ انْتِزاعًا يَنْتَزِعُهُ مِنَ النّاسِ، ولَكِنْ يَقْبِضُ العِلْمَ بقَبْضِ العُلَماءِ، حتّى إذا لَمْ يَتْرُكْ عالِمًا، اتَّخَذَ النّاسُ رُؤُوسًا جُهّالًا، فَسُئِلُوا فأفْتَوْا بغيرِ عِلْمٍ، فَضَلُّوا وأَضَلُّوا.
الراوي: عبدالله بن عمرو • مسلم، صحيح مسلم (٢٦٧٣) • [صحيح] •
அல்லாஹ், மக்களி(ன் மனங்களி)லிருந்து கல்வியை ஒரேயடியாகப் பறித்துக்கொள்ள மாட்டான். மாறாக, உலமாக்களை கைப்பற்றிக் கொள்வதன் மூலம் கல்வியைக் கைப்பற்றுகிறான். இறுதியில் ஒரு ஆலிம் கூட அவன் விட்டுவைக்காதபோது, மக்கள் அறிவீனர்களையே தலைவர்களாக ஆக்கிக்கொள்வார்கள். அவர்களிடம் கேள்வி கேட்கப்படும். அறிவில்லாமலேயே அவர்கள் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச் செய்வார்கள்.
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2673
இதனால் தான் ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் வழிகேடர்களுடன் உட்காருவதை எச்சரிக்கை செய்துள்ளார்கள்:
◼️இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்,
لا تجالس أهل الأهواء فإن مجالستهم ممرضة للقلب
மனோ இச்சையை பின்பற்றக் கூடியவர்களின் சபைகளில் உட்காராதீர்கள்; நிச்சயமாக அத்தகைய சபைகளில் உட்காருவது உள்ளத்தில் நோயை ஏற்படுத்தும்.
நூல்: அல் இபானா
◼️இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்,
وقال إسحاق بن إبراهيم: سمعته يقول: أخزى الله الكرابيسي، لا يجالس ولا يكلم، ولا تكتب كتبه، ولا تجالس من يجالسه.
கராபிஸி -க்கு அல்லாஹ் அவமானத்தை ஏற்படுத்தும்; அவருடன் யாரும் உட்காரக் கூடாது அவருடன் யாரும் பேசக்கூடாது; அவருடைய புத்தகங்கள் எழுதப்படக்கூடாது; அவருடன் யார் உட்காருகிறாரோ அவருடனும் உட்கார கூடாது.
(கராபிஸி என்பவன் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற வழிகேட்ட ஜஹ்மிய்யா கொள்கையில் இருந்தவன் ஆவான்)
நூல்:
ص192 - كتاب بحر الدم فيمن تكلم فيه الإمام أحمد بمدح أو ذم
◼️அப்துல் வஹ்ஹாப் இப்னுல் கஃப்ஃபாஃப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்,
عبدالوهاب بن الخفاف قال: "مررت بعمرو بن عبيد وحده، فقلت: مالك؟ تركوك؟ قال: نهى الناس عني ابن عون فانتهوا"
நான் அம்ர் இப்னு உபைத் -ஐ ஒருமுறை கடந்து சென்றேன்; அவன் தனியாக சென்று கொண்டிருந்தான்; அப்போது அவனைப் பார்த்து என்ன ஆனது உனக்கு, மக்கள் உன்னுடன் இருப்பதை விட்டு விட்டார்களா? என்று கேட்டேன். அதற்கு அவன், இப்னு அவ்ன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் என்னுடன் உட்காரக் கூடாது என்று மக்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள் அதனால் மக்கள் என்னுடன் இருப்பதை விட்டு விட்டார்கள் என்று கூறினான்.
நூல்: ميزان الاعتدال 5/330
(அம்ர் இப்னு உபைத் என்பவன் வழிகெட்ட முஃதஜிலா கொள்கையில் முக்கியமான அழைப்பாளனாக இருந்தவன்)
◼️ அல் பகவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்,
قد مَضَتِ الصَّحابةُ والتابِعونَ وأتباعُهم وعُلماءُ السُّنَّة على هذا مُجْمِعِين مُتَّفِقِين، على مُعاداةِ أهلِ البِدَعِ، ومُهاجَرَتِهم
ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களை பின்பற்றிய நல்லடியார்கள் மற்றும் அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்கள் ஆகிய அனைவரும், அஹ்லுல் பித்ஆவை விரோதம் கொள்ள வேண்டும்; மேலும் அவர்களுடன் சேராமல் அவர்களை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தில் இருந்துள்ளார்கள்.
நூல்: شرح السنة للبغوي 1/227
எனவே, வழிகேடர்களுடைய சபையில் உட்காருவதும் அவர்களுடைய உபதேசங்களை கேட்பதும் ஸலஃபி மன்ஹஜுக்கு முரணான ஒரு விஷயமாகும். முஸ்லிம் உம்மத்தும் குறிப்பாக இளைஞர்களும்; மார்க்கத்தில் உறுதி இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் இத்தகைய இயக்கவாதிகளை விட்டு விலகிக் கொள்ள வேண்டும்; ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் விளக்கத்தில் பால் மார்க்கத்தை பின்பற்றி அதில் உறுதியாக இருக்கும் உலமாக்களோடு தொடர்பில் இருந்து கொள்ள வேண்டும். இது தான் இம்மை மறுமையின் வெற்றிக்கு வழி வகுக்கும். இன் ஷா அல்லாஹ்.
அபூ ஆயிஷா அப்துல்லாஹ் இப்னு சமீர் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
t.me/al_ilmush_sharee| AL ILMUSH SHAREE