உடல் எடை குறைக்கனும்.. ஆனா டைம் இல்லையா அப்போ இந்த 4 டிப்ஸ் உங்களுக்கு தான்!
உடல் எடை அதிகரித்திருப்பவர்கள் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதாவது மாத்திரை உட்கொண்டு எடையை குறைக்கலாமா என எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் மற்றும் சீரான உடற்பயிற்சிகளின் மூலமாக தான் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என மருத்துவர் கூறுகிறார்.
தண்ணீர்: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தேவையான நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் வயிறு நிறைவாக இருக்கும். தேவையில்லாத உணவு சாப்பிட தூண்டாது.
உடற்பயிற்சி: அன்றாடம் 20 நிமிடம் உடற்பயிற்சி இருக்க வேண்டும். இதனை தினசரி கடைபிடிக்க வேண்டும். அதுவும் உடற்பயிற்சியின்போது கட்டாயம் வியர்வை வெளியேற வேண்டும்.
6-6 பிளான்: மாலை 6 மணிக்கு சாப்பிட தொடங்கி 6.30க்குள் முடிக்க வேண்டும்.
சாப்பிட்ட பிறகு நடை பயிற்சி: மூன்று வேளையும் சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி கட்டாயம் தேவை.
இவற்றை தொடர்ந்து பின்பற்றி வர உடல் எடையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இதனை தொடர்ந்து செய்ய வேண்டும். இதுதவிர நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடல் பயிற்சி செய்யலாம்.
@DoctorOLBN