கவிதைகள் OLBN ™


Kanal geosi va tili: Hindiston, Tamilcha


கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா
🔰🔰

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Tamilcha
Statistika
Postlar filtri


கற்பனையை கலைத்து;
யதார்த்ததை உணர்ந்து..

பொறுப்புகளை சுமந்து;
நிறை குறைகளை ஏற்று..

இணையும் மனங்கள்
ஏறுவதில்லை..

நீதி மன்றங்களுக்கு!

❤️❤️❤️

ஞாயிறு காலை வணக்கம்!

@KavithaigalOLBN


மணப்பெண்ணுக்கு பொட்டு வைக்கத்
தேடியபோதுதான்
மண்டபத்தில் தாய்மாமனைக்
காணவில்லையென்று அறிந்தது மணமேடை..

பத்திரிக்கையில்
தன் பெயரைச் சேர்க்கவில்லையென்ற
கோபத்தை
கல்யாணத்தை புறக்கணித்தலால்
ஈடு செய்ய முனைத்திருந்த தாய்மாமன்..

மண்டப வாசலில்
முறுக்கிக் கொண்டு நின்றிருந்தார்..

கையைப் பற்றிய
மச்சானின் அழைப்பை உதறிவிட்டு;
தங்கையின் அழுகையை
தரையில் எறிந்தார்..

பங்காளிகள் பஞ்சாயத்தை
சொம்போடு வீசினார்..

யார் பேச்சுக்கும் மசியாமல்
வீராப்பு காட்டியவரை..

மாமா... என்றழைப்பில்

கண்ணீர் கசியச் செய்த மணப்பெண்
மணமேடை இறங்கியிருந்தாள்..

நீ எதுக்கும்மா மேடைய விட்டு வந்த என்று,
துண்டு கீழே விழுந்தது தெரியாமல்
உருகியோடியவர்..

பெண்ணை மணமேடையில்
நிறுத்தியபோது
நல்ல நேரம் துவங்கியிருந்தது..

நான் கோபப்படும் உரிமையை
நீதானம்மா கொடுத்த என்றபடி..

தாய்மாமன் சீர் செய்தவரின்
காலில் விழுந்து வணங்கிய மணப்பெண்ணின் நெற்றியில்..

அழுத்தமாய் பொட்டொன்று வைத்தார்..

ஒட்டிக்கொண்டது இரத்த சொந்தம்!

மண்டப வாசலில்
துண்டாகிக் கிடந்தது வீராப்பு!!

தாய் மாமானும் தாய்க்கு நிகர்
என உணர்த்தியது!

❤️❤️❤️

@KavithaigalOLBN

2.2k 0 11 12 71

கோபம் அதிகம் வந்தாலும்
வார்த்தைகளை விட்டு வீடாதீர்கள்..

விழும் அடிகள் தரும்
வலியை விட
உதிரும் வார்த்தைகள்
தரும் வலிகள் மிக
அதிகம்..

மரணம் வரை
வலியை சுமக்க மனம்
ஒன்றும் மண் அல்ல!

🚶🏻🖤

@KavithaigalOLBN


நம்மை
நேசிப்பவரைவிட
ஒரு படி அதிகமாக
அவர்களை நேசித்துவிட வேண்டும்..

அவ்வளவு தான்
வாழ்க்கை!

🥰🥰🥰

இனிய காலை!

@KavithaigalOLBN


பெண் என்பவள்
போதை அல்ல;
நாம் கண்டோ,
உண்டோ களிப்புற..

பெண் என்பவள்
ஆடை அல்ல;
நாம் உடுத்தி, கிழித்து சேதப்படுத்த..

பெண் என்பவள்
கண்ணாடி அல்ல;
நம்மையே நாம் அங்கு காண..

பெண் என்பவள் கொடி
கம்பம் அல்ல;
நம்மை கொடியாய் உயர்த்த..

பெண் என்பவள்
கனவு அல்ல;
நம் ஆசைகளை மட்டும் காண..

பெண் என்பவள்
வர்ணம் அல்ல;
நம் கொண்டாட்டங்களுக்கு பூசி மகிழ..

அப்படியெனில் பெண் என்பவள் யார் தான்??

பெண் ஒரு மருந்து;
நாம் அன்பிற்கு ஏங்குகையில்..

பெண் ஒரு ஊசி;
நம் கிழிசல்களை தைத்து அழகாக்கும்..

பெண் ஒரு கூரிய கத்தி;
நம் தவறுகளுக்கு நம்மை கிழிப்பாள்..

பெண் ஒரு கொடி;
உயரே பறந்து நம்மை
பார்க்க வைப்பாள்..

பெண் ஒரு காட்சி;
நம் காட்சி பிழைகளின்
விடையாகி திருத்துவாள்..

பெண் ஒரு தூரிகை;
நம் வெற்று வாழ்க்கையில், வர்ணம் பூசி,
பின் வர்ணமாகி, நம் கறைபட்டு கரைந்தே போகிறாள்!!

🌄

தீப ஒளி வாழ்துக்கள்!

@KavithaigalOLBN


உங்களை நீங்கள்
நேசியுங்கள்..

உலகமே உங்களை
நேசிக்கும்!



காலை வணக்கம்!

@KavithaigalOLBN


உங்கள்
வாழ்க்கையில்
தவறான
நிகழ்வுகள் நேரும்
போது புத்தகத்தை
மூடாதீர்கள்..

அடுத்த பக்கம்
திருப்பி, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குங்கள்!

🌃✨

இனிய இரவு!

@KavithaigalOLBN


பொக்கிஷத்தை
எனக்குள் புதைத்து
கொண்ட பேரழகி அவள்..

என்னவள்!

💜💞💙

இனிய காலை!

@KavithaigalOLBN


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
திருமணமானவர்கள் முத்தமிடுவதை நிறுத்தினால் அவர்களின் உறவில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

🔞
@DocAntharangam


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
நிபந்தனையற்ற
அன்புக்கு..

வயது ஒரு
பொருட்டல்ல!

❤️❤️❤️

@KavithaigalOLBN


முத்தம் என்ற
சொல் மட்டும் போதாது,
அதில் பொதிந்துள்ள
உணர்வுகளை சொல்ல..

ஒரு சொட்டு
மழைத்துளி போல,
இதயத்தில் இறங்கி குளிர்ச்சியை தரும்..

ஒரு பூவின் மணம் போல,
மனதை மயக்கும்,
மனதை ஈர்க்கும்..

ஒரு தாய் தழுவும் போது
குழந்தைக்கு கிடைக்கும்
அந்த அமைதி..

ஒரு காதலன்
தன் காதலியை
கண்களில் பார்த்து
சொல்லும் வார்த்தைகள்..

ஒரு நண்பன் தன் நண்பனை
பிரிந்த பின் நினைத்து
வருந்தும் தருணம்..

முத்தம் என்பது
வெறும் தொடுதல் அல்ல..

அது ஒரு உணர்வு..

ஒரு உறவு..

அது மன்னிப்பை கேட்கும் வழி..

அது நன்றி சொல்லும் வழி..

அது ஒரு வாக்குறுதி
என்றென்றும் இருப்போம் என்று!

அது ஒரு ஆறுதல்..

கண்ணீரை துடைக்கும் துணிச்சல்!

முத்தம் என்பது வாழ்க்கை..

அதுவே நம்மை முழுமைப்படுத்தும்!

ஒரு முத்தம் தருவதால்
உலகம் இன்னும் அழகாகிறது!!

😘😘😘

@KavithaigalOLBN

5k 0 29 6 66

பாதத்திற்கும் உன் உதட்டிற்கும்..

அறுபத்தியிரண்டு
முத்தத் தொலைவு!

😘😘😘

@KavithaigalOLBN


உன் கண்ணால்
ஈற்கப்பட்டு மறைந்த
என் கவிதைகள் எல்லாம்..

உயிர் பெற்று எழுத
தோணியது!

💗💗💗

@KavithaigalOLBN

8k 0 14 5 41

போராடி தோற்றுப்
பார்..

ஜெயித்தவனும்
உன்னை
மறக்கமாட்டான்!



இனிய காலை!

@KavithaigalOLBN


நீயாக வந்து
சரி செய்யும்வரை
ஆறுவதில்லை..

நீ தந்த காயங்கள்!

❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

@KavithaigalOLBN

7.1k 0 20 10 52

எப்போதும்
உங்கள் இதயம்
அதிகம்
புன்னகைக்கும்
இடத்தில் இருங்கள்!

🧡💛💚

இனிய காலை!

@KavithaigalOLBN


மனதிலிருந்து எண்ணமும்
எண்ணத்திலிருந்து
செயலும்
செயலில் இருந்து
வாழ்க்கையும்
தொடங்குகிறதது..

அந்த மனதை
எப்பொழுதும்
வாட விடாமல்
புத்துணர்சியோடு
பார்த்துக் கொண்டாலே
போதும்..

அன்றாட சந்தோசங்கள்
யாவும் நம்மோடு
நிலைத்திருக்கும்!



இனிய காலை!

@KavithaigalOLBN


இப்போதெல்லாம்
நீயென்னை விட
நன்கு
கைத்தேர்ந்து
விட்டாய்
என்கிறாய்..

ஆம் சரியே..

கற்றுக்
கொடுப்பதாய்
என்னிடம் வாங்கிய
முத்தங்களை
எப்போது நீ
திருப்பி அளிப்பாய்?

🥰🥰🥰

இனிய காலை!

@KavithaigalOLBN


உரிமை உள்ள உறவும்
உண்மை உள்ள அன்பும்..

நேர்மை உள்ள நட்பும்
நம்பிக்கை உள்ள வாழ்வும்..

என்றும் விட்டுப் போவதுமில்லை;
தோற்றுப் போவதுமில்லை!



இனிய இரவு!

@KavithaigalOLBN


பிடிவாதமும்
கர்வமும்
பறந்து தான்
போகிறது..

நம் இதயத்தில்
இடம் பிடித்தவர்களுக்காக!

❤❤️❤️

இனிய காலை!

@KavithaigalOLBN

20 ta oxirgi post ko‘rsatilgan.