கவிதைகள் OLBN ™


Kanal geosi va tili: Hindiston, Tamilcha


கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா
🔰🔰

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Tamilcha
Statistika
Postlar filtri




💜💞💙

@KavithaigalOLBN


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
கொஞ்சம் கவிதை
கொஞ்சும் கவிதை
கொஞ்சம் எழுதவா
கொஞ்சும் இதழ்களில்..

கொஞ்சம் எழுதியே
கொஞ்சி எழுதியே
கொஞ்சம் நகர்கிறது
கொஞ்சா நினைவுகள்..

கொஞ்சம் நீ ஒதுங்கினால்
கொஞ்சும் உறக்கம் என் கண்களில்!

❤️❤️❤️

@KavithaigalOLBN


இன்பம் பொங்கும் இனிய ஆண்டாக அமையட்டும்..

இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க!!

அன்புடன்..

🌺🌸🌼

Happy New Year 2025

🌺🌸🌼

@KavithaigalOLBN


விரும்பிய அனைத்தையும் அடைவது
மட்டுமே வெற்றியல்ல..

விரும்பிய ஏதோ ஒன்றை இழக்காமல் இருப்பதும் தோல்வியாகாது!

😇🍭🥰

@KavithaigalOLBN


உலகை காப்பது நமது வேலையல்ல..

முதலில் நாம் அதை உருவாக்கவில்லை..

அது எங்கு செல்கிறது என்ன நடக்கிறது என்பது நமது பொறுப்பல்ல..

உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்..

அந்த மாற்றத்திலேயே உலகின் ஒரு பகுதியை மாற்றி விட்டீர்கள்!



@KavithaigalOLBN


பசியறிந்து சோறு போட
ஒருவர் இருக்கும் வரை..

சாப்பிட்டாயா எனக் கேட்க
ஒருவர் இருக்கும் வரை..

தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என விசாரிக்க
ஒருவர் இருக்கும் வரை..

நோய் வந்தால் இரவுகளில்
கண் விழித்துப் பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்கும் வரை..

குரல் மாறுபாட்டில் மன நிலையைக் கணிக்க
ஒருவர் இருக்கும் வரை..

போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடு என
வழியனுப்ப
ஒருவர் இருக்கும் வரை..

வீட்டைக் காத்திருந்து கதவு திறக்க ஒருவர் இருக்கும் வரை..

தோற்றுப் போய் திரும்புகையில்
தோள் சாய்த்துக் கொள்ள
ஒருவர் இருக்கும் வரை..

போ என்றாலும் விட்டுப் போகாது
சண்டை போட்டுக் கொண்டேனும்
உடனிருக்க
ஒருவர் இருக்கும் வரை..

மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள
ஒருவர் இருக்கும் வரை..

நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க
ஒருவர் இருக்கும் வரை..

எதற்காகவும் எவரிடமும் நம்மை விட்டுக் கொடுக்காத
ஒருவர் இருக்கும் வரை..

கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி
நானிருக்கிறேனென உணர்த்த
ஒருவர் இருக்கும் வரை..

தவறுகளைத் தவறென சுட்டிக் காட்டித் திருத்தும்
ஒருவர் இருக்கும் வரை..

துயர் அழுத்தும் கணங்களில்
அருகிருந்து கண்ணீர்த் துடைக்க
ஒருவர் இருக்கும் வரை..

மனக் குறைகளைப் புலம்பித் தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க
ஒருவர் இருக்கும் வரை
மட்டுமே..

வாழ்வு வசந்தமானது!

❤️❤️❤️

@KavithaigalOLBN




உனக்கு பிடிக்கும்
என்பதால் அல்ல;
எனக்கு பிடிக்கும்
என்பதால்
மல்லிகை சூடி
கொள்வாய்..

காலைப்பொழுது
விடியும் முன்பே
கசங்கிடும் என
தெரிந்தும்!

😘😘😘

மார்கழி கவிதை!

@KavithaigalOLBN


இயற்பியல் படிக்கவந்த என்னை இதழியல்
படிக்க வைத்தாய்..

விந்தை புரியும்
விழிகளால் வேதியியல்
மாற்றங்கள் நிகழ்த்தினாய்..

சிரித்து பேசி சிலாகித்து
செந்தமிழை ஊற்றினாய்..

ஐ லவ் யூக்கு மட்டும்
ஆங்கிலம் தொட்டாய்..

கன்னத்து மச்சங்கள்
காட்சியளிக்கிறது
கணித குறியீடுகளாய்..

உன் ஐவிரல் பூமியில்
விளையும்
நகங்கள் சொன்னது
புவியியல் தன்மையை..

தலையில் பூச்சூடி
தாவரவியலையும்
தன்பக்கம் இழுத்தாய்..

கூடி வாழ்ந்து
குடிமையியலை
கொண்டாடினாய்..

பொன் ஆபரணங்களால்
பொருளியல்
உன் வசம் ஆனது..

வா ஒரு முத்தம்
என்றால்
வணிகவியல் பேசுகிறாய்..

அதனால்தான்
என்னவோ
பள்ளியறைக்குச்
செல்லாமல் உன்
பக்கத்திலேயே.. நான்

இத்தனையும் சொல்லித்தந்து
இதயம் கவர்ந்தவளே..

உயிரியலுக்கும்
ஒரு நேரம் ஒதுக்கு..

நாளைய வரலாறு
நமதாகட்டும்!

💜💕💙

@KavithaigalOLBN


கணவனும் அறிந்திடப் போவதில்லை அவள் கத்தலுக்கான காரணத்தை..

"தேடுவதே வேலையா"வென
முறைக்கும் மகனறிவானா
அவனை படித்ததால்
மூளை மழுங்கியதென்று..

"கீழே தவறவிட்டுக் கொண்டே" இருப்பிங்களா?..
வருந்தும் மகளறிவாளா
உறவுகளை இறுக்கப் பற்றியதில் தளர்ந்த நரம்புகளைப்பற்றி..

உச்சந்தலையில்
பரவிய அனல்..
உள்ளங்கையையும் பாதத்தையும்
பற்றிக் கொள்ள..

உச்சியில் ஆரம்பித்த கங்கை
முதுகின் வழி தரையிறங்க
வார்த்தைகளானது ரணம்..

மடி தேடி
குழந்தையாய் தவிக்கிறது
அவளின் "ஏழாம் பருவநிலை"..

காலநேரமறியாத உதிரப்போக்கும்..

கழிந்திடாத கழிவுகளும்
உடலெங்கும் நர்த்தனத்திலிருக்க..

மடிகள்
தரவேண்டாம்..

ஊற்றும் வேர்வைக்கு
சிறு துண்டுத் துணியாக இருங்கள்..

அவளின் இறுதிக் கால உதிரப்போக்கை வழியனுப்ப..

மென்மையான சிறு தலைகோதல் போதுமானது அவளுக்கு!

🌺🌸🌼

@KavithaigalOLBN


ஆயிரம் உதடுகள்
ஆறுதல் கூறினாலும்..

10 நிமிடம் தனிமையில்
நமக்கு நாமே கொடுக்கும்
தைரியம் மட்டுமே..

நம்மை அடுத்த
கட்டத்தை நோக்கி
பயணிக்க வைக்கிறது!

🖤🖤🖤

@KavithaigalOLBN

4k 0 14 10 43

கற்பனையை கலைத்து;
யதார்த்ததை உணர்ந்து..

பொறுப்புகளை சுமந்து;
நிறை குறைகளை ஏற்று..

இணையும் மனங்கள்
ஏறுவதில்லை..

நீதி மன்றங்களுக்கு!

❤️❤️❤️

ஞாயிறு காலை வணக்கம்!

@KavithaigalOLBN


மணப்பெண்ணுக்கு பொட்டு வைக்கத்
தேடியபோதுதான்
மண்டபத்தில் தாய்மாமனைக்
காணவில்லையென்று அறிந்தது மணமேடை..

பத்திரிக்கையில்
தன் பெயரைச் சேர்க்கவில்லையென்ற
கோபத்தை
கல்யாணத்தை புறக்கணித்தலால்
ஈடு செய்ய முனைத்திருந்த தாய்மாமன்..

மண்டப வாசலில்
முறுக்கிக் கொண்டு நின்றிருந்தார்..

கையைப் பற்றிய
மச்சானின் அழைப்பை உதறிவிட்டு;
தங்கையின் அழுகையை
தரையில் எறிந்தார்..

பங்காளிகள் பஞ்சாயத்தை
சொம்போடு வீசினார்..

யார் பேச்சுக்கும் மசியாமல்
வீராப்பு காட்டியவரை..

மாமா... என்றழைப்பில்

கண்ணீர் கசியச் செய்த மணப்பெண்
மணமேடை இறங்கியிருந்தாள்..

நீ எதுக்கும்மா மேடைய விட்டு வந்த என்று,
துண்டு கீழே விழுந்தது தெரியாமல்
உருகியோடியவர்..

பெண்ணை மணமேடையில்
நிறுத்தியபோது
நல்ல நேரம் துவங்கியிருந்தது..

நான் கோபப்படும் உரிமையை
நீதானம்மா கொடுத்த என்றபடி..

தாய்மாமன் சீர் செய்தவரின்
காலில் விழுந்து வணங்கிய மணப்பெண்ணின் நெற்றியில்..

அழுத்தமாய் பொட்டொன்று வைத்தார்..

ஒட்டிக்கொண்டது இரத்த சொந்தம்!

மண்டப வாசலில்
துண்டாகிக் கிடந்தது வீராப்பு!!

தாய் மாமானும் தாய்க்கு நிகர்
என உணர்த்தியது!

❤️❤️❤️

@KavithaigalOLBN

5.6k 0 13 12 92

கோபம் அதிகம் வந்தாலும்
வார்த்தைகளை விட்டு வீடாதீர்கள்..

விழும் அடிகள் தரும்
வலியை விட
உதிரும் வார்த்தைகள்
தரும் வலிகள் மிக
அதிகம்..

மரணம் வரை
வலியை சுமக்க மனம்
ஒன்றும் மண் அல்ல!

🚶🏻🖤

@KavithaigalOLBN

6k 0 13 9 62

நம்மை
நேசிப்பவரைவிட
ஒரு படி அதிகமாக
அவர்களை நேசித்துவிட வேண்டும்..

அவ்வளவு தான்
வாழ்க்கை!

🥰🥰🥰

இனிய காலை!

@KavithaigalOLBN


பெண் என்பவள்
போதை அல்ல;
நாம் கண்டோ,
உண்டோ களிப்புற..

பெண் என்பவள்
ஆடை அல்ல;
நாம் உடுத்தி, கிழித்து சேதப்படுத்த..

பெண் என்பவள்
கண்ணாடி அல்ல;
நம்மையே நாம் அங்கு காண..

பெண் என்பவள் கொடி
கம்பம் அல்ல;
நம்மை கொடியாய் உயர்த்த..

பெண் என்பவள்
கனவு அல்ல;
நம் ஆசைகளை மட்டும் காண..

பெண் என்பவள்
வர்ணம் அல்ல;
நம் கொண்டாட்டங்களுக்கு பூசி மகிழ..

அப்படியெனில் பெண் என்பவள் யார் தான்??

பெண் ஒரு மருந்து;
நாம் அன்பிற்கு ஏங்குகையில்..

பெண் ஒரு ஊசி;
நம் கிழிசல்களை தைத்து அழகாக்கும்..

பெண் ஒரு கூரிய கத்தி;
நம் தவறுகளுக்கு நம்மை கிழிப்பாள்..

பெண் ஒரு கொடி;
உயரே பறந்து நம்மை
பார்க்க வைப்பாள்..

பெண் ஒரு காட்சி;
நம் காட்சி பிழைகளின்
விடையாகி திருத்துவாள்..

பெண் ஒரு தூரிகை;
நம் வெற்று வாழ்க்கையில், வர்ணம் பூசி,
பின் வர்ணமாகி, நம் கறைபட்டு கரைந்தே போகிறாள்!!

🌄

தீப ஒளி வாழ்துக்கள்!

@KavithaigalOLBN


உங்களை நீங்கள்
நேசியுங்கள்..

உலகமே உங்களை
நேசிக்கும்!



காலை வணக்கம்!

@KavithaigalOLBN


உங்கள்
வாழ்க்கையில்
தவறான
நிகழ்வுகள் நேரும்
போது புத்தகத்தை
மூடாதீர்கள்..

அடுத்த பக்கம்
திருப்பி, ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குங்கள்!

🌃✨

இனிய இரவு!

@KavithaigalOLBN

4.9k 0 10 12 36

பொக்கிஷத்தை
எனக்குள் புதைத்து
கொண்ட பேரழகி அவள்..

என்னவள்!

💜💞💙

இனிய காலை!

@KavithaigalOLBN

20 ta oxirgi post ko‘rsatilgan.